ஆப்நகரம்

உலகக்கோப்பையில் வரலாறு படைத்த டென்மார்க்....: அடிவாங்கிய ஆஸி.,.!

டென்மார்க், பிரான்ஸ் அணிகள் மோதிய உலகக்கோப்பை கால்பந்து தொடரின் லீக் போட்டிகோல் எதுவும் அடிக்கப்படாமல் ‘டிரா’ ஆனது.

Samayam Tamil 26 Jun 2018, 9:32 pm
மாஸ்கோ:டென்மார்க், பிரான்ஸ் அணிகள் மோதிய உலகக்கோப்பை கால்பந்து தொடரின் லீக் போட்டிகோல் எதுவும் அடிக்கப்படாமல் ‘டிரா’ ஆனது.
Samayam Tamil 9


உலகளவில் அதிக ரசிகர்களை கொண்ட கால்பந்து விளையாட்டின் உலகக்கோப்பை தொடர் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும். கடந்த 2014ல் இத்தொடர் பிரேசிலில் நடந்தது.

இதையடுத்து இந்த ஆண்டுக்கான 21வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடக்கிறது. வரும் ஜூலை 15 வரை ரஷ்யாவில் இத்தொடர் நடக்கிறது. 32 அணிகள் பங்கேற்கும் இத்தொடர் ரஷ்யாவின் 11 முக்கிய நகரங்களில் 64 போட்டிகள் நடக்கிறது.

இதன் ஃபைனல் போட்டி மாஸ்கோவின் லுஸ்நிகி மைதானத்தில் நடக்கவுள்ளது.
சமாரா மைதானத்தில் நடந்த குரூப் - சி பிரிவின் கடைசி லீக் போட்டியில், டென்மார்க், பிரான்ஸ் அணியை எதிர்கொண்டது.

இதில் முதல் பாதியின் ஆரம்பத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயற்சித்தனர். ஆனால் எதுவும் பலன் அளிக்காத காரணத்தால், முதல் பாதியின் முடிவில் 0-0 என சமநிலை வகித்தது.

பின் பரபரப்பாக துவங்கிய போட்டியின் இரண்டாவது பாதியிலும் கோல் அடிக்க இரு அணி வீரர்களும் மல்லுக்கட்டினர். இதனால் போட்டியின் கடைசி நிமிடம் வரை பரபரப்பு நிலவியது. ஆனால், கடைசி வரை இரு அணி வீரர்களின் கோல் முயற்சியும் தோல்வியில் முடிய, உலகக்கோப்பை தொடரின் கோல் எதுவும் அடிக்கப்படாமல் ’டிரா’ ஆன முதல் போட்டியானது.

முடிவில், 0-0 என்ற கோல் கணக்கில் போட்டி ‘டிரா’வில் முடிந்தது. இருப்பினும் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடம் பிடித்த டென்மார்க், பிரான்ஸ் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.


இது வரலாறு......
தவிர, உலகக்கோப்பை வரலாற்றில் இதுவரை பங்கேற்ற போட்டியில் டென்மார்க் அணி 0-0 என ‘டிரா’ செய்தது இல்லை. இந்நிலையில் இன்று டென்மார்க் அணி புது வரலாறு படைத்தது.

பொளந்து கட்டிய பெரு.....
சோச்ச்சியில் நடந்த மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலியா, பெரு அணிகள் மோதின. இப்போட்டியில் 2-0 என்ற கோல்கணக்கில் பெரு அணி வெற்றி பெற்றது. பெரு அணிக்கு காரில்லோ (18வது நிமிடம்), குர்ரியோ (50) கோல் அடித்தனர்.
In their entire World Cup history, Denmark have never drawn 0-0. Let's hope that they're not about to make history today.

அடுத்த செய்தி

டிரெண்டிங்