ஆப்நகரம்

Colombia vs Japan - 61வது தரவரிசை ஜப்பான், 16வது தரவரிசை கொலம்பியாவை வீழ்த்தி சாதனை

உலகக் கோப்பைக் கால்பந்து தொடரில் பல்வேறு திடுக்கிடும் அதிர்ச்சி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் பிஃபா கால்பந்து தரவரிசையில் 61வது இடத்தில் உள்ள ஜப்பான், 16வது தரவரிசையில் உள்ள கொலம்பியாவை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.

Samayam Tamil 19 Jun 2018, 7:50 pm
உலகக் கோப்பைக் கால்பந்து தொடரில் பல்வேறு திடுக்கிடும் அதிர்ச்சி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் பிஃபா கால்பந்து தரவரிசையில் 61வது இடத்தில் உள்ள ஜப்பான், 16வது தரவரிசையில் உள்ள கொலம்பியாவை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.
Samayam Tamil Colombia-vs-Japan


ஆசியாவின் முதல் அணி :
அதுமட்டுமல்லாமல் முதல் ஆசியா கண்டத்தை சேர்ந்த ஒரு அணி, தென் அமெரிக்கா கண்டத்தை சேர்ந்த ஒரு அணியை உலகக் கோப்பை கால்பந்தில் வீழ்த்துவது இதுவே முதல் முறையாகும்.

ஜப்பான் வெற்றி:
இந்த சாதனையை இன்று நடந்த கொலம்பியா - ஜப்பான் அணிகளுக்கிடையே நடந்த போட்டியில் நிகழ்ந்துள்ளது. 16வது தரவரிசையில் இருந்தாலும் கொலம்பியா வீரர்களை விட, 61வது இடத்தில் இருக்கும் ஜப்பான் அணி வீரர்கள் சுறுசுறுப்புடனும், சிறப்பாகவும் விளையாடினர்.

பல முறை கொலம்பியாவுக்கு எதிராக கோல் போட பந்தை எடுத்துச் சென்ற ஜப்பான் வீரர்கள் 2 கோல்களை போட்டனர். கொலம்பியாவால் ஒரே ஒரு கோல் மட்டுமெ போட முடிந்தது. இதையடுத்து ஜப்பான் 2-1 என கொலம்பியாவை வீழ்த்தியது.


முதல் ரெட் கார்டு :
உலகக் கோப்பை கால்பந்து 2018ல் முதல் ரெட் கார்டை கொலம்பியாவின் கார்லோஸ் சான்செஸ் பெற்றார். இவர் ஜப்பான் வீரர் கோல் போட முயன்ற போது அவரின் கைகளால் தடுத்ததாக கூறி ரெட் கார்டு காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார்.


இதையடுத்து ஜப்பானுக்கு பெனல்டிகார்னர் ஃபிரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. அதை ஜப்பானின் ப்ளூ சாமுராய் அருமையான கோல் ஆக்கினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்