ஆப்நகரம்

ரசிகர்கள்ன்னா இப்படி இருக்கனும் -வெற்றியை கொண்டாட மைதானத்தை சுத்தம் செய்த ஜப்பான், செனகல் ரசிகர்கள்

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நடந்த போட்டிகளில் ஜப்பான் மற்றும் செனகல் அணி வெற்றி பெற்றது. இதை ரசிகர்கள் வித்தியாசமான முறையில் கொண்டாடினர்.

Samayam Tamil 20 Jun 2018, 12:52 pm
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நடந்த போட்டிகளில் ஜப்பான் மற்றும் செனகல் அணி வெற்றி பெற்றது. இதை ரசிகர்கள் வித்தியாசமான முறையில் கொண்டாடினர்.
Samayam Tamil senagal 1


21வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடைப்பெற்று வருகின்றன. இந்த தொடரின் போட்டிகள், ரஷ்யாவின் பல முக்கிய நகரங்களில் பிரமாண்ட மைதானங்களில் நடைப்பெற்று வருகின்றன.

நேற்று நடந்த போட்டிகளில் ‘ஹெச் ’ பிரிவில் கொலம்பியா - ஜப்பான் அணிகளும், போலாந்து - செனகல் அணிகள், ‘ஏ’ பிரிவில் ரஷ்யா - எகிப்து அணிகள் மோதின.


இதில் ஜப்பான் 2-1 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவையும், செனகல் 2 - 1 என்ற கோல் கணக்கில் போலாந்தையும், ரஷ்யா அணி 3 - 1 என்ற கோல் கணக்கில் எகிப்து அணியை வீழ்த்தியது.




வித்தியாசமான கொண்டாட்டம் :
ஜப்பான், செனகல் அணிகள் வெற்றி பெற்றதை ரசிகர்கள் ஆரவாரமாக கொண்டாடியதோடு, போட்டி நடைப்பெற்ற மைதானத்தில் குவிந்த குப்பைகளை ரசிகர்களே சுத்தம் செய்தனர்.



நேற்று நடந்த முதல் போட்டியில் ஜப்பான் வென்ற பின்னர் மைதானத்தில் இருந்த குப்பைகளை சுத்தம் செய்தனர். இதையடுத்து ஆப்ரிக்க கண்டத்தை சேர்ந்த ஒரு நாடு தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த ஒரு நாட்டை உலகக் கோப்பை கால்பந்து தொடரில் வீழ்த்திய முதல் சாதனையை செனகல் அணி போலாந்துக்கு எதிராக செய்தது.


செனகல் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அந்த ரசிகர்களும் அவர்கள் அமர்ந்திருந்த பகுதியின் குப்பைகளை சுத்தம் செய்தனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்