ஆப்நகரம்

ஜப்பான் அடிச்ச அடி... ஆடிப் போன 2 உலக சாம்பியன்கள்... கத்தாரை காலி செஞ்ச ஜெர்மனி!

உலக சாம்பியன் ஸ்பெயினை ஜப்பான் வீழ்த்தி ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்குள் நுழைந்து அதகளம் செய்திருக்கிறது.

Authored byமகேஷ் பாபு | Samayam Tamil 2 Dec 2022, 5:42 am

ஹைலைட்ஸ்:

  • ஸ்பெயினை வீழ்த்தி ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு தகுதி பெற்றது ஜப்பான்
  • மற்றொரு உலக சாம்பியன் ஜெர்மனி கோல் அடிப்படையில் வெளியேறியது
  • நடப்பு தொடரில் 2 முன்னாள் சாம்பியன்களை தோற்கடித்துள்ளது ஜப்பான்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Japan
Source: FIFA World Cup Twitter
கத்தார் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் லீக் சுற்று போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டி வருகின்றன. இந்நிலையில் குரூப் ஈ பிரிவில் எந்த இரண்டு அணிகள் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்குள் செல்லப் போகின்றன என்ற கேள்வி எழுந்தது. அதற்கு நேற்று நள்ளிரவு பதிலும் கிடைத்துவிட்டது. ஆனால் சாதாரண பதில் அல்ல.

கால்பந்து வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய பதில். ஜப்பான் பெற்ற வெற்றி 2 முன்னாள் உலக சாம்பியன்களை ஆட்டம் காண வைத்துள்ளது. அதில் ஒன்று கத்தாரை காலி செய்துவிட்டு சொந்த நாட்டிற்கு திரும்பும் அளவிற்கு மாறியிருக்கிறது. இனி மைதானத்திற்குள் நுழைவோம்.
Round of 16 ட்விஸ்டுகள்... ஜெயிச்சு வெளியேறிய மெக்சிகோ... தோத்து உள்ள போன போலந்து!
ஜப்பான் vs ஸ்பெயின்
குரூப் ஈ பிரிவில் எந்த ஒரு அணியும் அடுத்த சுற்றுக்கு தேர்வாகாமல் இருந்தது. அதில் ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய இரண்டு உலக சாம்பியன்களும் இடம்பெற்றிருந்தன. இவர்கள் இருவரும் தான் ரவுண்ட் ஆஃப் 16க்குள் நுழைவர் என்று ரசிகர்களும் எதிர்பார்த்தனர். ஆனால் அங்கு தான் ட்விஸ்ட்டே நடந்துள்ளது. கட்டாய வெற்றியை நோக்கி 4 அணிகளும் நேற்று களமிறங்கின. அதில் பெரிதும் எதிர்பார்ப்பை கூட்டியது கோஸ்டாரிகா, ஜெர்மனி இடையிலான போட்டி.

கோல் வாய்ப்புகள்


இதில் 2-4 கோல்கணக்கில் ஜெர்மனி வெற்றி பெற்றது. ஆனால் ஜப்பான், ஸ்பெயின் மோதலில் யாரும் எதிர்பாராத சம்பவம் நடந்தது. போட்டி தொடங்கிய 11வது நிமிடத்தில் ஆல்வரோ மொராட்டா கோல் அடித்து ஸ்பெயின் அணியை முன்னிலைப்படுத்தினார். அதன்பிறகு டிஃபன்ஸில் அதிக கவனம் செலுத்த தொடங்கியது. கிடைக்கும் சிறு வாய்ப்புகளையும் கோலாக மாற்ற முயற்சித்து கொண்டிருந்தனர்.

ஜப்பான் அபாரம்

முதல் பாதி 0-1 என முடிந்தது. இரண்டாவது பாதி தொடங்கியதும் ஆட்டம் சூடுபிடித்தது. 48வது நிமிடத்தில் டோவன் கோல் அடித்து ஜப்பானை முன்னிலைப்படுத்தினார். ஸ்பெயின் ஆடிப் போனது. அடுத்தவொரு கோலை எதிர்பார்த்து அட்டாக்கிங்கில் ஈடுபட்டது. அடுத்த 3 நிமிடங்களில் டனகா மற்றொரு கோலை அடித்து 2-1 என ஜப்பானை முன்னிலைப்படுத்தினார். ஸ்பெயின் வீரர்கள் கலங்கினர்.

வெற்றி பெற்ற ஜெர்மனி


51வது நிமிடத்திற்கு பின்னர் யாராலும் கோல் அடிக்க முடியவில்லை. உலகக்கோப்பை தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வி காணாத ஸ்பெயின் 3வது போட்டியில் தோல்வி அடைந்தது. இதனால் 6 புள்ளிகளுடன் ஜப்பான் புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு சென்றது. இந்த அணி ஏற்கனவே ஜெர்மனியை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்திருந்தது. நேற்றைய போட்டியில் ஸ்பெயின் தோல்வியை தழுவியதால் ஏற்கனவே ஒரு வெற்றி, ஒரு டிரா மூலம் 4 புள்ளிகளை பெற்றிருந்தது.
அந்த 21 நிமிடங்கள் மாஸ்... கலங்கிய மெஸ்ஸி... கடைசியில் செம சம்பவம் பண்ண அர்ஜென்டினா!
3வது இடத்திற்கு சென்ற ஜெர்மனி


ஜெர்மனி ஒரு தோல்வி, ஒரு டிரா, ஒரு வெற்றி மூலம் 4 புள்ளிகளை பெற்றிருந்தது. இந்த இரு அணிகளும் சம நிலையில் இருந்ததால் கோல் வித்தியாசம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதில் ஸ்பெயின் 6, ஜெர்மனி 1 என வந்தது. இதன்மூலம் 2வது இடம் ஸ்பெயினுக்கும், 3வது இடம் ஜெர்மனிக்கும் கிடைத்தது.

சோகத்துடன் வெளியேறியது

முதல் இரண்டு அணிகள் மட்டுமே ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு தகுதி பெறும் என்பதால் ஜப்பான், ஸ்பெயின் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்குள் சென்றன. உலக சாம்பியன் ஜெர்மனி சோகத்துடன் உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. லீக் சுற்றில் ஜப்பான் இரண்டு முன்னாள் உலக சாம்பியன்களை வென்றிருப்பது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

விரைவில் ஆசிய சாம்பியன்கள்

ஏனெனில் ஆசியாவிலும் சிறந்த கால்பந்து அணி, வீரர்கள், பயிற்சியாளர்கள் இருப்பதை உலக அரங்கிற்கு உணர்த்தியுள்ளனர். உலகக்கோப்பை தொடரில் ஆசிய அணிகள் எதுவும் இதுவரை சாம்பியன் பட்டம் வென்றதில்லை. ஆனால் ஜப்பான், சவுதி அரேபியா போல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் கால்பந்து உலகக்கோப்பை எட்டாக்கனி அல்ல.
எழுத்தாளர் பற்றி
மகேஷ் பாபு
செய்தி தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகம் என 8 ஆண்டுகள் அனுபவம். எளிய மக்களின் குரலாகவும், சமூக அவலங்களை சுட்டிக் காட்டும் வகையிலும் எழுதப் பிடிக்கும். அரசியல் செய்திகளை வழங்குவதில் தீராத ஆர்வம் உண்டு. சமயம் தமிழ் ஊடகத்தில் Senior Digital Content Producer ஆக பணியை தொடர்ந்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்