ஆப்நகரம்

கடல் உணவாக மாறிய பிரபல ஆக்டோபஸ்!

உலகக் கோப்பை போட்டியில் ஜப்பான் அணி விளையாடும் போட்டிகளை துல்லியமாகக் கணித்த ஆக்டோபஸ் உலகக் கோப்பை தொடர் முடிவதற்குள் உணவாக்கப்பட்டுவிட்டது.

Samayam Tamil 3 Jul 2018, 4:04 pm
உலகக் கோப்பை போட்டியில் ஜப்பான் அணி விளையாடும் போட்டிகளை துல்லியமாகக் கணித்த ஆக்டோபஸ் உலகக் கோப்பை தொடர் முடிவதற்குள் உணவாக்கப்பட்டுவிட்டது.
Samayam Tamil un-virus-extraterrestre-cambio-el-adn-de-los-pulpos-portada-1038x584


உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள் ஜூன் 14ஆம் தேதி தொடங்கின. 32 நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கும் இத்தொடர் ஜூலை 15ஆம் தேதி வரை நடக்கிறது.

இத்தொடரில் ஜப்பான் அணி பங்கேற்கும் போட்டியின் முடிவுகளை ரபியோ என்ற ஆக்டோபஸ் சரியாகக் கணித்து வந்தது. ஹொக்காய்டோவில் உள்ள ஒபிரா என்ற நகரைச் சேர்ந்த கிமியோ அபே என்ற மீனவர் இந்த ஆக்டோபஸை கடலிலிருந்து பிடித்து வந்துள்ளார்.

இந்த உலகக் கோப்பையில் ஜப்பான் அணி இதுவரை விளையாடியுள்ள அனைத்து போட்டிகளின் முடிவையும் சரியாகக் கணித்த இந்த ஆக்டோபஸ் இப்போது விற்பனை செய்யப்பட்டுவிட்டது. இந்நேரம் அது கடல் உணவாக சமைக்கப்பட்டிருக்கும் என்று அதைப் பிடித்துவந்த மீனவர் கூறியுள்ளார்.

மற்றொரு ஆக்டோபஸை வைத்து தொடர்ந்து மற்ற போட்டிகளையும் கணிக்கப்போவதாக அவர் கூறுகிறார். அதற்கு ரபியோ ஜுனியர் என்று பெயர் வைக்கப்போவதாகவும் கூறியுள்ளார்.

2010ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலகக் கோப்பையில் ஜெர்மனி அணியின் போட்டிகளை லால் என்ற ஆக்டோபஸ் சரியாகக் கணித்தது. மேலும், இறுதியில் நெதர்லாந்தை வீழ்த்தி ஸ்பெயின் கோப்பை வெல்லும் என்றும் அது சரியாகக் கணித்தது நினைவுகூரத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்