ஆப்நகரம்

மழையில் நனைந்த மற்ற தலைவர்கள்.... குடைக்குள் புடின்..... கேலி செய்த ரசிகர்கள்!

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் பரிசு வழங்கும் விழாவில் ரஷ்ய அதிபர் புடினுக்கு மட்டும் குடை பிடிக்கப்பட்டு, மற்ற தலைவர்கள் மழையில் நனைந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 16 Jul 2018, 10:03 am
மாஸ்கோ: உலகக்கோப்பை கால்பந்து தொடரின் பரிசு வழங்கும் விழாவில் ரஷ்ய அதிபர் புடினுக்கு மட்டும் குடை பிடிக்கப்பட்டு, மற்ற தலைவர்கள் மழையில் நனைந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil 705124-putin-reuters


உலகளவில் அதிக ரசிகர்களை கொண்ட கால்பந்து விளையாட்டின் உலகக்கோப்பை தொடர் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும். கடந்த 2014ல் இத்தொடர் பிரேசிலில் நடந்தது.

இதையடுத்து இந்த ஆண்டுக்கான தொடர் வரும் ஜூன் 14 முதல் நேற்று வரை ரஷ்யாவில் நடந்தது. சுமார் 32 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் ஃபைனலில் பிரான்ஸ் அணி, குரோசியாவை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.

ஒரே ஒரு குடை.....
இந்நிலையில் ஃபைனல் போட்டி முடிந்து பரிசு வழங்கும் விழாவில் ரஷ்ய அதிபர் புடின், பிரான்ஸ் அதிபர் எமானுவல் மெக்ரான், குரோசிய அதிபர் கோலிண்டா ஆகியோர் பங்கேற்க மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு வந்தனர்.

அப்போது மழை பெய்தது. உடனே ரஷ்ய அதிபர் புடினுக்கு மட்டும் குடை பிடிக்கப்பட்டது. மற்ற தலைவர்கள் மழையில் நனைந்த படி இருந்தனர். இதைப்பார்த்த கால்பந்து ரசிகர்கள், ரஷ்யாவில் ஒரே ஒரு குடைதான் உள்ளதா என டுவிட்டரில் கேலி செய்து வருகின்றனர்.

பெரும் பின்னடைவு.....
உலகக்கோப்பை தொடரை வெற்றிகரமாக நடத்திய ரஷ்யாவுக்கு கடைசி நாளில் இந்த சம்பவம் பெரும் கரும்புள்ளியாக அமைந்துள்ளது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

During the presentation ceremony, as it began to rain, other world leaders stood on the podium getting drenched while Russian President Vladimir Putin was the only one to get an umbrella.

அடுத்த செய்தி

டிரெண்டிங்