ஆப்நகரம்

FIFA 2018 Awards: உலகக்கோப்பை கால் பந்து தொடரை வென்ற பிரான்ஸ் அணிக்கு ரூ.255 கோடி பரிசு

குரேஷியா அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கால்பந்து உலகக்கோப்பையை கைப்பற்றிய பிரான்ஸ் அணிக்கு ரூ.255 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.

Samayam Tamil 16 Jul 2018, 7:06 am
குரேஷியா அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கால்பந்து உலகக்கோப்பையை கைப்பற்றிய பிரான்ஸ் அணிக்கு ரூ.255 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.
Samayam Tamil World cup Final


ரஷ்யாவில் நடைபெற்ற கால்பந்து உலகக்கோப்பை திருவிழாவின் இறுதிப் போட்டி ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இதில் பிரான்ஸ் அணி குரேஷியா அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 20 ஆண்டுகளுக்கு பின்னா் இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது.

கோப்பையை வென்ற பிரான்ஸ் அணிக்கு பரிசுத் தொகையாக ரூ.255 கோடியும், இரண்டாம் இடத்தை பிடித்த குரேஷியா அணிக்கு ரூ.188 கோடியும் வழங்கப்பட்டது.

இதனைத் தொடா்ந்து 2018ம் ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரராக குரேஷியா அணி கேப்டன் லூக் மோட்ரிக் தோ்வு செய்யப்பட்டாா். அதன்படி அவருக்கு தங்க பந்து பரிசாக வழங்கப்பட்டது.


இந்த ஆண்டின் சிறந்த கோல் கீப்பராக தோ்வு செய்யப்பட்ட பெல்ஜியம் அணியின் திபாட் தோ்வு சைய்யப்பட்டு தங்க கையுறை விருதாக வழங்கப்பட்டது.

மேலும் இத்தொடரில் சிறப்பாக ஆடி 6 கோல்கள் அடித்த இங்கிலாந்து அணியின் ஹாரிகேனுக்கு தங்க காலணி (Golden Boot) விருது வழங்கப்பட்டது.

சிறந்த இளம் வீரரருக்கான விருதை பிரான்ஸ் அணியின் எம்பாமே பெற்றுக் கொண்டுள்ளாா். உலகக்கோப்பை தொடரில் அவா் 4 கோல்கள் அடித்து அணியின் வெற்றிக்கு பாடுபட்டுள்ளாா்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்