ஆப்நகரம்

Pro Kabaddi Final Highlights: தபாங் டெல்லியை தட்டித்தூக்கிய பெங்கால் வாரியர்ஸ்: புது சாம்பியனாகி அசத்தல்!

புதுடெல்லி: தபாங் டெல்லி அணிக்கு எதிரான புரோ கபடி தொடரின் லீக் போட்டியின் ஃபைனலில் வெற்றி பெற்ற பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக கோப்பை வென்று சாதித்தது.

Samayam Tamil 19 Oct 2019, 9:12 pm
இந்தியாவின் முக்கிய நகரங்களில் புரோ கபடி லீக் தொடர் நடந்தது. இதன் ஃபைனலில் தபாங் டெல்லி, பெங்கால் வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டது.
Samayam Tamil Bengal Warriors


இதில் ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் மாறி மாறி புள்ளிகள் பெற போராடினர். முதல் பாதியின் முடிவில் இரு அணிகளும் தலா 17-17 புள்ளிகள் எடுத்து சமநிலையில் இருந்தது.


பின் பரபரப்பாக துவங்கிய இரண்டாவது பாதியில் அணி பெங்கால் வாரியர்ஸ் வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். தபாங் டெல்லி அணி வீரர்கள் புள்ளிகள் பெற போராடிய போதும் எதுவும் பலன் அளிக்கவில்லை.
இறுதியில், பெங்கால் வாரியர்ஸ் அணி 39 - 34 என்ற புள்ளிக்கணக்கில் தபாங் டெல்லி அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதித்தது.


புள்ளி விவரம்
தபாங் டெல்லி : பெங்கால் வாரியர்ஸ்
27 ரெய்டு புள்ளிகள் 22
0 சூப்பர் ரெய்டுகள் 0
3 சமாளிக்கும் புள்ளிகள் 10
2 ஆல் அவுட் புள்ளிகள் 6
2 கூடுதல் புள்ளிகள் 1

அடுத்த செய்தி

டிரெண்டிங்