ஆப்நகரம்

சிந்துவுக்கு கூடுதலாக ஒரு பயிற்சியாளர்: துணை முதல்வர் பேச்சால் சர்ச்சை

''வரும் 2020ல் பி.வி. சிந்து தங்கப்பதக்கம் வெல்லுவதற்காக அவருக்கு கூடுதலாக ஒரு பயிற்சியாளர் வழங்கப்படும்'' என்று தெலங்கானா துணை முதல்வர் மஹ்மூத் அலி கூறியுள்ள கருத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

TOI Contributor 22 Aug 2016, 3:41 pm
''வரும் 2020ல் பி.வி. சிந்து தங்கப்பதக்கம் வெல்லுவதற்காக அவருக்கு கூடுதலாக ஒரு பயிற்சியாளர் வழங்கப்படும்'' என்று தெலங்கானா துணை முதல்வர் மஹ்மூத் அலி கூறியுள்ள கருத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil  telengana ministers offer a better coach for sindhu to win gold in 2020
சிந்துவுக்கு கூடுதலாக ஒரு பயிற்சியாளர்: துணை முதல்வர் பேச்சால் சர்ச்சை


ஒலிம்பிக் பெண்கள் ஒற்றையர் போட்டியில் பி.வி. சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்தியாவில் ஒலிம்பிக்கில் முதன் முதலாக சிந்து வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். இன்று காலை ஐதராபாத் வந்தடைந்த சிந்துவுக்கும், அவரது பயிற்ச்சியாளர் கோபிசந்துவுக்கும் பிரமாண்ட வரவேற்பு வழங்கப்பட்டது.

சாலை எங்கும் குவிந்திருந்த மக்கள் மற்றும் மாணவர்கள் சிந்துவுக்கு பூ தூவி வரவேற்பு அளித்தனர்.

சிந்துவுக்கு இன்று கசிபவ்ளி ஸ்டேடியத்தில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் தெலங்கானா துணை முதல்வர் மஹ்மூத் அலி பேசுகையில், ''சிந்து எங்களது மகள். அவரால் எங்களுக்கு கவுரவம் கிடைத்துள்ளது. அவருக்கு இனி நாங்கள் கூடுதலாக ஒரு பயிற்சியாளர் வழங்க உள்ளோம். தற்போதைய அவரது பயிற்ச்சியாளர் கோபிசந்த் நன்றாக பயிற்சி அளிக்கிறார். ஆனால், அவர் அடுத்து 2020ல், டோக்கியோவில் நடக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் பெற வேண்டும் என்பதற்காக கூடுதலாக ஒரு பயிற்சியாளர் வழங்க முடிவு செய்துள்ளோம்'' என்றார்.

இவரது இந்தப் பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஏற்கனவே கோபிசந்துவிடம் சிந்து நல்ல பயிற்சி எடுத்துக் கொண்டு இருக்கும்போது, துணை முதல்வர் ஏன் குழப்புகிறார் என்று அங்கு சிலர் கிசு கிசுக்கவும் செய்தனர். ஆனால், துணை முதல்வர் மஹ்மூத் அலியின் ஆலோசனையை சிந்து ஏற்க மாட்டார் என்றே தெரிகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்