ஆப்நகரம்

ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ.1 கோடி பரிசு - இந்திய ரயில்வே துறை

டெல்லி: ரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் இந்திய ரயில்வே வீரர்களுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார்.

TOI Contributor 6 Aug 2016, 1:14 pm
டெல்லி: ரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் இந்திய ரயில்வே வீரர்களுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார்.
Samayam Tamil 1cr prize for gold winner in olympic
ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ.1 கோடி பரிசு - இந்திய ரயில்வே துறை

உலகிலேயே மிகமுக்கியமான விளையாட்டு திருவிழாவானது ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் இந்தாண்டு ரியோ டி ஜெனிரோ நகரில் ஆகஸ்ட் 5 முதல் 21 வரை நடைபெற்றுவருகிறது. இந்த திருவிழாவில் உலகெங்குமுள்ள பல்வேறு நாட்டை சார்ந்த வீரர்கள் தங்கள் விளையாட்டு திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

MR @sureshpprabhu has announced promotions, awards for Rly players winning medals in Rio.https://t.co/jkOm2ampxA pic.twitter.com/aYvmL2MIAu— Ministry of Railways (@RailMinIndia) August 6, 2016

இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய ரயில்வே அணி வீரர்கள் 35 பேர் பங்கேற்கின்றனர். இவ்வாறு பங்கேற்கும் வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றால் ரூ.1 கோடியும், வெள்ளி , வெண்கலம், எட்டாவது இடத்துக்குள் வருபவர்கள், பங்கேற்பவர்களுக்கு முறையே ரூ, 75லட்சம், 50 லட்சம், 30 லட்சம், 5 லட்சம் வழங்கப்படும் என்று இரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்