ஆப்நகரம்

சிந்துவை அதிர வைத்த ஆந்திர பிரதேச அரசு..

ஒலிம்பிக் பாண்மிண்டனில் வெள்ளிப்பதக்கம் வென்று பெருமை சேர்த்த பி.வி சிந்துக்கு ஆந்திர அரசு பரிசு மழை பொழிந்துள்ளது.

TNN 20 Aug 2016, 5:28 pm
ஒலிம்பிக் பாண்மிண்டனில் வெள்ளிப்பதக்கம் வென்று பெருமை சேர்த்த பி.வி சிந்துக்கு ஆந்திர அரசு பரிசு மழை பொழிந்துள்ளது.
Samayam Tamil andhra cabinet approves 3 crore prize money for sindhu
சிந்துவை அதிர வைத்த ஆந்திர பிரதேச அரசு..


ஒலிம்பிக் போட்டிகளில் தனிநபர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ள பி.வி.சிந்துக்கு,இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பரிசுத்தொகைகள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் சிந்து எங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவர் என தெலங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்கள் உரிமை கோரி வருகின்றன.எனவே தெலங்கானாவை அதிர்ச்சி அடையச் செய்யும் வகையில் சிந்துவுக்கு பரிசு மழை பொழிந்துள்ளது சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசு.
சிந்துவுக்கு குரூப்-1 பிரிவில் அரசு வேலை,மூன்று கோடி ரூபாய் பரிசுத் தொகை,1000 சதுர அடி நிலம் ஆகியவை வழங்க ஆந்திர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இதுமட்டுமல்லாமல் சிந்துவின் பயிற்சியாளரான கோபிசந்துக்கு 50 லட்ச ரூபாய் பரிசுத் தொகை அளிக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்