ஆப்நகரம்

அடுத்த தங்க வேட்டைக்கு உசைன் போல்ட் ரெடி!

ஓலிம்பிக் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், உசைன் போல்ட் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்று மேலும் ஒரு தங்கம் வெல்லும் வகையில் முனைந்துள்ளார்.

TOI Sports 17 Aug 2016, 12:55 am
ரியோ : ஓலிம்பிக் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், உசைன் போல்ட் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்று மேலும் ஒரு தங்கம் வெல்லும் வகையில் முனைந்துள்ளார்.
Samayam Tamil bolt through to semis of mens 200m
அடுத்த தங்க வேட்டைக்கு உசைன் போல்ட் ரெடி!


பிரேசிலில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில், ஆகஸ்ட் 16ல் நடந்த 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்திற்கான தகுதி சுற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட ஜமைக்காவை சேர்ந்த மின்னல் வீரர் உசைன் போல்ட், போட்டி தூரத்தை 20.28 நொடிகளில் கடந்து அரையிறுதிப் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

ஏற்கனவே கடந்த ஞாயிறு அன்று 100 மீட்டர் ஓட்டத்தில் மின்னல் வேகத்தில் ஓடி தங்கப்பதக்கத்தை வென்றிருந்தார். இந்நிலையில் 200 மீ போட்டியில் அரையிறுதியில் நுழைந்துள்ளதால், அவரின் மின்னல் சாகசத்தின் மூலம இறுதிப் போட்டியில் நுழைந்து மீண்டும் தங்கப்பதக்கத்தை வெல்வதற்கான சாதனையை படைப்பார் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்