ஆப்நகரம்

ஒலிம்பிக்ஸ் : சிவ தபா ஏமாற்றம் !

ரியோ ஒலிம்பிக்கில் இந்திய குத்துச்சண்டை வீரர் சிவ தபா தோல்வியடைந்து வெளியேறினார்.

TOI Contributor 11 Aug 2016, 10:13 pm
ரியோ: ரியோ ஒலிம்பிக்கில் இந்திய குத்துச்சண்டை வீரர் சிவ தபா தோல்வியடைந்து வெளியேறினார்.
Samayam Tamil boxer shiva thapa beaten in rio olympics
ஒலிம்பிக்ஸ் : சிவ தபா ஏமாற்றம் !


பிரேசிலின் ரியோவில் 31வது ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. இதன் ஆண்கள் 56 கி.கி., எடைப்பிரிவில், இந்திய வீரர் சிவ தபா, க்யூபா வீரர் ராமிரஷை எதிர்கொண்டார்.

இதில் துவக்கம் முதல் க்யூபாவின் ராமிரஷின் கையே ஓங்கியிருந்தது. முதல் செட்டில் 25-30 என இழந்த சிவ தபா, இரண்டாவது செட்டையும் 27-30 என இழந்தார். பின் நடந்த மூன்றாவது சுற்றிலும் சொதப்பிய சிவ தபா, 27-30 என பறிகொடுத்தார்.

இறுதியில்,இந்தியாவின் சிவ தபா, 0-3 என க்யூபா வீரர் ராமிரஷிடம் தோல்வியடைந்து ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்