ஆப்நகரம்

ஆஸ்திரேலியா மன்னிப்பு கேட்க வேண்டும் : அடம் பிடிக்கும் சீனா !

தங்கள் வீரரை தவறாக பேசியதற்காக ஆஸ்திரேலிய வீரர் மன்னிப்பு கேட்க வேண்டும் என சீனா கோரிக்கை விடுத்துள்ளது.

TOI Contributor 8 Aug 2016, 7:08 pm
ரியோ: தங்கள் வீரரை தவறாக பேசியதற்காக ஆஸ்திரேலிய வீரர் மன்னிப்பு கேட்க வேண்டும் என சீனா கோரிக்கை விடுத்துள்ளது.
Samayam Tamil china demands australian apology after malicious attack on countrys swimmers
ஆஸ்திரேலியா மன்னிப்பு கேட்க வேண்டும் : அடம் பிடிக்கும் சீனா !


பிரேசிலின் ரியோவில் 31வது ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. இதன் ஆண்கள் 400 மீ., ப்ரிஸ்டைல் பிரிவில் ஆஸ்திரேலிய வீரர் மாக் ஹார்டன் தங்கம் வென்றார். இதன்பின் இவர், ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கி மீண்டும் போட்டிகளில் கலந்து கொண்ட சீனா வீரர் சன் யங்கை ‘டிரக் சீட் ‘ என கேலி செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து தனிநபர் தாக்குதலில் ஈடுபட்ட ஆஸ்திரேலிய வீரர் மாக், தங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என சீன அதிகாரிகள் ஒலிம்பிக் நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்