ஆப்நகரம்

ஒலிம்பிக் பதக்க கனவை கலைத்த வீரரின் ஆணுறுப்பு!

உயரம் தாண்டும் போட்டியில் பங்குபெற்ற ஜப்பான் வீரரின் பதக்கக்கனவு அவரது ஆணுறுப்பினால் கலைத்து போயுள்ளது.

TOI Contributor 16 Aug 2016, 2:35 pm
உயரம் தாண்டும் போட்டியில் பங்குபெற்ற ஜப்பான் வீரரின் பதக்கக்கனவு அவரது ஆணுறுப்பினால் கலைத்து போயுள்ளது.
Samayam Tamil dick accident during pole vault event at rio olympic 2016
ஒலிம்பிக் பதக்க கனவை கலைத்த வீரரின் ஆணுறுப்பு!


ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் உலகம் முழுவதும் இருந்து பல வீரர், வீராங்கனைகள் பங்கு பெற்றுவருகின்றனர். பதக்கம் வெல்வதை கனவாக கொண்டு தீவிரமான பயிற்சியிலும், போட்டியிலும் பங்கேற்கின்றனர். ஜப்பானை சேர்ந்த ஹிரோகி ஒஜிடா எனும் வீரர் போல் வால்ட் எனப்படும் தடியூன்றித் தாண்டும் போட்டியில் பங்கேற்ற போது பெரும் துன்பம் நிகழ்ந்துள்ளது. தடியூன்றி தாண்டும் போது உடல் மேலே வைக்கப்பட்டுள்ள கம்பியில் படாமல் தாண்ட வேண்டும் என்பது போட்டியின் விதி. ஆனால் ஜப்பான் வீரரின் உடல் கம்பியில் பட்டதால் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவரது ஆணுறுப்பு பகுதி கம்பியில் பட்டதால் போட்டியில் இருந்து வெளியேறினார். மேலும் கடுமையான வலியால் பாதிக்கப்பட்டார் என்பது அவரது முகத்தின் குறியீடு மூலம் அறியமுடிந்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்