ஆப்நகரம்

முதன்முறையாக ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஃபிஜி தீவுகள்..!

ஒலிம்பிக் போட்டிகளின் வரலாற்றில் முதன்முறையாக தங்கப்பதக்கத்தை வென்று சாதித்துள்ளது ஃபிஜி தீவுகள் அணி.

TNN 12 Aug 2016, 5:29 pm
ஒலிம்பிக் போட்டிகளின் வரலாற்றில் முதன்முறையாக தங்கப்பதக்கத்தை வென்று சாதித்துள்ளது ஃபிஜி தீவுகள் அணி.
Samayam Tamil fiji islands gets its first oympic gold ever
முதன்முறையாக ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஃபிஜி தீவுகள்..!


தென் பசுபிக் பகுதியில் அமைந்துள்ள மிகச்சிறிய நாடான ஃபிஜி தீவுகள் அணி இதுவரை ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்கள் வென்றதில்லை.ஆனாலும் மனம் தளராத அந்த நாடு, இந்த முறையும் தனது அணியை ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு அனுப்பி வைத்தது.ஆனாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ’எழுவர் ரக்பி’-யில் ஃபிஜி அணி சிறப்பாக செயல்பட்டு வந்தது.எனவே இந்த பிரிவில் ஃபிஜி அணி பதக்கம் வெல்ல வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்பட்டது.

அனைவரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது போல,எழுவர் ரக்பி போட்டிகளின் அனைத்து சுற்று போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்ட ஃபிஜி அணி,இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.இறுதிப்போட்டியில் பிரிட்டன் அணியை எதிர்கொண்ட ஃபிஜி அணி 43-7 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் மிக எளிதாக வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.

இந்த தங்கப்பதக்கம் ஒலிம்பிக் போட்டிகளில் ஃபிஜி தீவுகள் பெறும் முதல் பதக்கம் என்பதால்,அந்நாட்டு மக்கள் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.இது ஃபிஜி தீவுகளின் வரலாற்றில் ஒரு முக்கியமான தருணம் என கூறியுள்ள அந்நாட்டின் பிரதமர்,இந்த சாதனைக்காக அந்நாட்டில் ஒரு நாள் பொது விடுமுறையும் அறிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்