ஆப்நகரம்

எனது பெற்றோர், பயிற்சியாளருக்கு இந்தப் பதக்கம் சமர்ப்பணம்

ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்த பிவி சிந்துவுக்கு டுவிட்டரில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

TNN 20 Aug 2016, 5:34 am
ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்த பிவி சிந்துவுக்கு டுவிட்டரில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
Samayam Tamil i dedicate this medal to my coach my parents
எனது பெற்றோர், பயிற்சியாளருக்கு இந்தப் பதக்கம் சமர்ப்பணம்


நேற்று நடந்த பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் சிந்து, ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினுடன் மோதினார். முதல் செட்டை எளிமையாக கைப்பற்றிய சிந்துவுக்கு இரண்டாது செட் கடும் சவாலாக இருந்தது. இதேபோல் தான் மூன்றாவது செட்டும், கரோலினா வேகத்தை சிந்துவால் சமாளிக்க முடியவில்லை. தொடர்ந்து போராடிக்கொண்டிருந்த சிந்து இறுதியில் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். இது குறித்து சிந்து கூறுகையில், இப்போது நான் மேகத்தில் மிதப்பது போல் உணர்கிறேன்.

இந்த வாரம் எனக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது. ஒவ்வொரு போட்டியிலும், எனக்கு ஆதரவாகவும், பிரார்த்தனை செய்து கொண்டும் இருந்த அனைவருக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். என்னோடு போட்டி போட்ட கரோலினாவும் நன்றாக விளையாடினார். எனக்கு கிடைத்த இந்தப் பதக்கத்தை என்னுடைய பெற்றோருக்கும், பயிற்சியாளருக்கும் நான் சமர்ப்பிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்