ஆப்நகரம்

ரியோ ஒலிம்பிக்: 20 கி.மீ நடை போட்டியில் மணிஷ் சிங்கிற்கு 13வது இடம்

20 கி.மீ நடைப் போட்டியில் இந்தியாவின் மணிஷ் சிங்கிற்கு 13வது இடம் கிடைத்துள்ளது.

TNN 13 Aug 2016, 2:26 am
ரியோ: 20 கி.மீ நடைப் போட்டியில் இந்தியாவின் மணிஷ் சிங்கிற்கு 13வது இடம் கிடைத்துள்ளது.
Samayam Tamil in mens 20km race walk indias manish singh finishes at 13th position
ரியோ ஒலிம்பிக்: 20 கி.மீ நடை போட்டியில் மணிஷ் சிங்கிற்கு 13வது இடம்


பிரேசில் நாட்டின் ரியோவில் 31வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 20 கி.மீ., நடைப் போட்டியில் இந்தியா சார்பில் மணிஷ் சிங், குர்மீட் சிங் மற்றும் கணபதி கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் மணிஷ் சிங் ஒரு மணி நேரம் 21 நிமிடங்கள் 21 நொடிகள் பயணித்து, 13வது இடத்தை பிடித்தார். மற்ற இரண்டு இந்திய வீரர்களும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
In Men's 20km Race Walk India's Manish Singh finishes at 13th Position #Rio2016— ANI (@ANI_news) August 12, 2016
இப்போட்டியில் சீன வீரர் வாங் சென் ஒரு மணி நேரம் 19 நிமிடங்களில் (1:19:14) கடந்து தங்கம் வென்றார். இதையடுத்து சீன வீரர் ஷெலின் காய் 2வது இடத்தையும், ஆஸ்திரேலிய வீரர் டேன் பார்ட் 3வது இடத்தையும் பிடித்தனர்.
Men's 20km Race Walk Results! #Athletics #Olympicshttps://t.co/nsTMOoaC2b— Olympics (@Olympics) August 12, 2016

அடுத்த செய்தி

டிரெண்டிங்