ஆப்நகரம்

பாராலிம்பிக்ஸ்: ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவிற்கு தங்கப்பதக்கம்

பாராலிம்பிக்ஸ் போட்டியின் ஆண்கள் ஈட்டி எறிதல் விளையாட்டில் இந்தியாவின் தேவேந்திர ஜஜாரியா தங்கப்பதக்கம் வென்றார். அவர் 63.97 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து, புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

TNN 14 Sep 2016, 5:37 am
ரியோ: பாராலிம்பிக்ஸ் போட்டியின் ஆண்கள் ஈட்டி எறிதல் விளையாட்டில் இந்தியாவின் தேவேந்திர ஜஜாரியா தங்கப்பதக்கம் வென்றார். அவர் 63.97 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து, புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
Samayam Tamil in mens javelin throw indias devendra jhajharia wins gold medal
பாராலிம்பிக்ஸ்: ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவிற்கு தங்கப்பதக்கம்


பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் பாராலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் உயரம் தாண்டுத போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற மாரியப்பன் தங்கப்பதக்கம் வென்று, சாதனை படைத்தார். இதேபோல் பெண்கள் குண்டு எறிதல் போட்டியில் தீபா மாலிக் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
#Paralympics Javelin thrower Devendra Jhajharia wins goldhttps://t.co/yeVUlKk7gB pic.twitter.com/UZrBdpUjF3 — Times of India (@timesofindia) September 13, 2016 இந்நிலையில் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் தேவேந்திர ஜஜாரியா தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் 62.15 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து, புதிய உலக சாதனையையும் படைத்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தைச் சேர்ந்த தேவேந்திர ஜஜாரியா, தனது 8வது வயதில் மின்சாரம் தாக்கி இடது கையை இழந்தார்.
இவர் 2002ம் ஆண்டு கொரியாவில் நடைபெற்ற 8வது ஃபெஸ்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். இதுவே அவர் சர்வதேச போட்டியில் பெறும் முதல் பதக்கமாகும். இதையடுத்து 2014ம் ஆண்டு ஏதென்சில் நடைபெற்ற பாராலிம்பிக்ஸ் போட்டியில் 62.15 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து, அதன் முந்தைய சாதனையான 59.77 மீட்டரை முறியடித்து உலக சாதனை படைத்தார்.

இதன் மூலம் பாராலிம்பிக்ஸ் போட்டியில் 2வது தங்கப்பதக்கம் வென்ற வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்த சாதனையின் காரணமாக, அவருக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது. மேலும் 2012ம் ஆண்டு மார்ச் மாதம், இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதைப் பெற்றார். இந்த விருதைப் பெறும் முதல் பாராலிம்பியன் என்ற பெருமைக்கு தேவேந்திர ஜஜாரியா உரித்தானார்.

இந்நிலையில் ரியோவில் இன்று நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில், 63.97 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார். மேலும் அதிக தூரம் எறிந்து, புதிய உலக சாதனையையும் படைத்துள்ளார். இதன்மூலம் பாராலிம்பிக் போட்டிகளில் 2 தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் தேவேந்திர ஜஜாரியா எனும் சாதனையை படைத்துள்ளார். தங்கம் வென்ற தேவேந்திர ஜஜாரியாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்