ஆப்நகரம்

ஒலிம்பிக்கில் இந்தியாவின் வீர மங்கைகள்!

இந்தியாவை சேர்ந்த நான்கு பெண்கள் இதுவரை ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளனர்.

TNN 18 Aug 2016, 4:27 pm
இந்தியாவை சேர்ந்த நான்கு பெண்கள் இதுவரை ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளனர்.
Samayam Tamil indian woman power in olympics
ஒலிம்பிக்கில் இந்தியாவின் வீர மங்கைகள்!

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது என்பது ஒவ்வொரு முறையும் இந்தியாவின் கனவாக உள்ளது. இதுவரை ஒலிம்பிக்கில் இந்தியா பெற்றுள்ள 25 பதக்கங்களில் நான்கு பதக்கங்கள் பெண்கள் வாங்கியவை. பெண்களின் முதல் பதக்கத்தை வென்றவர் கர்ணம் மல்லேஸ்வரி. 2000-ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார். அதற்கு பிறகு12 ஆண்டுகள் கழித்து 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பாக்ஸ்ர் மேரி கோம் ஒரு வெண்கலம் வென்றார். அதே ஒலிம்பிக் போட்டியில் பேட்மின்டன் மகளிர் பிரிவில் சாய்னா நேவால் வெண்கலப்பதக்கம் வென்றார். தற்போது ரியோ ஒலிம்பிக்கில் சாக்ஷி மாலிக் வெண்கலம் வென்றுள்ளார்.


அடுத்த செய்தி

டிரெண்டிங்