ஆப்நகரம்

ரியோ ஒலிம்பிக் : ஆகஸ்ட் 13ல் இந்திய வீரர்கள் பங்கேற்கும் போட்டிகள்

ரியோ டி ஜெரினோ: 31வது ஒலிம்பிக் போட்டிகள் பிரேசிலுள்ள ரியோ டி ஜெரினோவில் நடைபெற்றுவருகிறது. இந்த ஒலிம்பிக் போட்டியில் ஆகஸ்ட் 12ம் தேதி இந்திய வீரர்கள் பாட்மிண்டன், தடகளம் உள்ளிட்ட பல்வேறுபோட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

TOI Contributor 13 Aug 2016, 1:28 am
ரியோ டி ஜெரினோ: 31வது ஒலிம்பிக் போட்டிகள் பிரேசிலுள்ள ரியோ டி ஜெரினோவில் நடைபெற்றுவருகிறது. இந்த ஒலிம்பிக் போட்டியில் ஆகஸ்ட் 12ம் தேதி இந்திய வீரர்கள் பாட்மிண்டன், தடகளம் உள்ளிட்ட பல்வேறுபோட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
Samayam Tamil indias schedule for day 8 rio olympic
ரியோ ஒலிம்பிக் : ஆகஸ்ட் 13ல் இந்திய வீரர்கள் பங்கேற்கும் போட்டிகள்

தடகளம்
பெண்களுக்கான 3000 மீ. ஸ்டீபிள் சேஸ் தகுதிச்சுற்றில் இந்தியாவைச் சார்ந்த சுதா சிங் மற்றும் லலிதா பாபர் ஆகியோர் களமிறங்குகிறார்கள். இந்த போட்டியானது இந்திய நேரப்படி மாலை 6.35 மணிக்கு தொடங்குகிறது.

பெண்களுக்கான 400 மீ. ஓட்டம் தகுதிச்சுற்றில் இந்தியாவைச் சேர்ந்த நிர்மலா பங்கேற்கிறார்.இந்த போட்டியானது இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

மாலை 5.35 மணியளவில் நடைபெற இருக்கும் ஆண்களுக்கான 400மீ. ஒட்ட பந்தய முதல் சுற்றில் முகமது அனாஸ் பங்கேற்க இருக்கிறார்.

மாலை 5.50க்கு நடக்கும் ஆண்களிக்கான நீளம் தாண்டும் போட்டியில் அக்கிர்ட் சர்மா பங்கேற்க இருக்கிறார்.

#RioWithTOI Lets keep you up to speed with India's schedule for Day 8 pic.twitter.com/XSZfR4Y4Ec— TOI Sports News (@TOISportsNews) August 12, 2016

பாட்மிண்டன்

இரவு 7.15 மணியளவில் நடைபெற இருக்கும் பெண்களுக்கான இரட்டையர் லீக் சுற்றில் இந்திய வீரர்கள் ஜுவாலா, அஸ்வினி ஆகியோர் தாய்லாந்து வீரர்களான சுபாஜிராகுல், டேராடனாசாய் ஆகியோரிடம் மோதவுள்ளனர்

ரியோ டி ஜெரினோ: 31வது ஒலிம்பிக் போட்டிகள் பிரேசிலுள்ள ரியோ டி ஜெரினோவில் நடைபெற்றுவருகிறது. இந்த ஒலிம்பிக் போட்டியில் ஆகஸ்ட் 12ம் தேதி இந்திய வீரர்கள் பாட்மிண்டன், தடகளம் உள்ளிட்ட பல்வேறுபோட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

மாலை 4 மணியளவில் நடைபெற இருக்கும் ஆண்கள் தனிநபர் 3-ஆவது சுற்றில் அனிருபன் லாஹிரி, செளராஸியா ஆகியோர் களமிறங்க உள்ளனர்.

ஹாக்கி

பெண்கள் பிரிவு ஹாக்கி போட்டியில் இந்தியா - ஆர்ஜென்டீனா அணிகள் மோதவுள்ளனர். இந்த போட்டியானது மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்