ஆப்நகரம்

ரஷ்ய வீராங்கனையிடம் மன்னிப்பு கேட்ட அமெரிக்க வீராங்கனை !

போட்டிக்கு பின் மரியாதை கொடுக்காத காரணத்துக்காக ரஷ்ய வீராங்கனையிடம் அமெரிக்க வீராங்கனை மன்னிப்பு கேட்டுள்ளார்.

TOI Contributor 10 Aug 2016, 3:33 pm
ரியோ: போட்டிக்கு பின் மரியாதை கொடுக்காத காரணத்துக்காக ரஷ்ய வீராங்கனையிடம் அமெரிக்க வீராங்கனை மன்னிப்பு கேட்டுள்ளார்.
Samayam Tamil king apologises for rude behaviour towards russias efimova
ரஷ்ய வீராங்கனையிடம் மன்னிப்பு கேட்ட அமெரிக்க வீராங்கனை !


பிரேசிலின் ரியோ நகரில் 31வது ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. இதன் பெண்கள் 100 மீ., நீச்சல் போட்டியில் வெற்றி பெற்ற பின் அமெரிக்க வீராங்கனை லில்லி கிங், இரண்டாவது இடம் பிடித்த ரஷ்யாவின் யூலியாவை பாராட்டாமல் மூன்றாவது இடம் பிடித்த தனது சக நாட்டு வீராங்கனையான கேட்டி மெல்லியை பாராட்டினார்.

தற்போது இந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ள இவர் யூலியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதுகுறித்து கிங் கூறியது:
நான் யூலியாவின் இடத்தில் இருந்தால் என்னை யாரும் பாராட்ட வேண்டும் என எதிர்பார்க்க மாட்டேன். அவர் அப்படி எதிர்பாத்திருந்தால் அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு கிங் கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்