ஆப்நகரம்

Tokyo Olympic ‘4 தங்கம்’ மொத்தம் 7 பதக்கம் வென்று வீராங்கனை சாதனை! குவியும் வாழ்த்துக்கள்!

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஒரு வீராங்கனை மொத்தம் 7 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.

Samayam Tamil 2 Aug 2021, 1:47 pm
32ஆவது ஒலிம்பிக் தொடர், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் நீச்சல் பிரிவில் கலந்துகொண்ட ஆஸ்திரேலிய வீராங்கனை ஏமா மக்கியன் 4 தங்கள் உட்பட மொத்தம் 7 பதக்கங்களை வென்று வரலாறு படைத்துள்ளார்.
Samayam Tamil ஏமா மக்கியன்


நீச்சல் பிரிவில் சாதனை:

நீச்சல் பிரிவில் இதுவரை எந்தவொரு வீராங்கனையும் 7 பதக்கங்கள் வென்றது கிடையாது. ஏமா மக்கியன்தான் முதல்முறையாக 7 பதக்கங்களை வென்றிருக்கிறார். குறிப்பாக, 400 மீட்டர் நீச்சல் பிரிவில் 2 முறை நடப்பு சாம்பியனான அமெரிக்காவை வீழ்த்தி ஏமா மக்கியன் ஆஸ்திரேலியாவுக்கு தங்கம் வென்று கொடுத்துள்ளார்.

ரிலே நீச்சலில் சாதனை:

மகளிர் 400 மீட்டர் ரிலே நீச்சல் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஏமா மக்கியன், கெய்லே மெக்வோன், செல்ஸி ஹாட்ஜஸ், கேட் கேம்பெல் ஆகியோர், இலக்கை 3:51:60 மைக்ரோ வினாடிகளில் கடந்து புது வரலாறு படைத்துள்ளனர்.

7 பதக்கம்:

ஆஸ்திரேலாயிவின் ஏமா மக்கியன் 100 மீட்டர் ப்ரீ ஸ்டைல், 400 மீட்டர் ப்ரீ ஸ்டைல், 400 மீ மெட்லே, 50 மீ ப்ரீ ஸ்டைல் ஆகியவற்றில் தங்கம் வென்றுள்ளார். அதேபோல், கலப்பு இரட்டையர் 400 மீட்டர் ரிலே, 100 மீ பட்டர்ப்ளை, 800 மீட்டர் ப்ரீ ஸ்டைல் ஆகியவற்றில் வெண்கல பதக்கம் என மொத்தம் 7 பதக்கங்களை நீச்சல் போட்டி மூலம் வென்றுள்ளார்.

இதுவரை 6 மட்டுமே:

1952ஆம் ஆண்டில் ஜெர்மனி வீராங்கனை கிறிஸ்டின் ஓட்டோ 6 பதக்கங்களை வென்றிருந்தார். அதேபோல், 2008ஆம் ஆண்டில் அமெரிக்க வீராங்கனை நடாலி காப்லினும் 6 பதக்கங்கள் வென்றிருந்தார். இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆஸ்திரேலியாவின் ஏமா மக்கியன் 7 பதக்கங்கள் வென்று, ஒரு ஒலிம்பிக்கில் அதிக பதக்கங்களை வென்ற மகளிர் என்ற வரலாற்று சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு உலகின் பல பகுதிகளில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்