ஆப்நகரம்

‘அடேங்கப்பா’ 70,000 பேர்தான் அந்த நாட்டுல இருங்காங்க…தங்கம் வென்று அசத்தல்!

பெர்முடா நாடு, முதல் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளது.

Samayam Tamil 27 Jul 2021, 7:42 pm
32ஆவது ஒலிம்பிக் தொடர் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 13 வயது, 17 வயது வீராங்கனைகள் தங்கம் வென்று உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார்கள். இந்நிலையில் 70,000 மக்கள் தொகை கொண்ட பெர்முடா நாட்டைச் சேர்ந்த ஒரு வீராங்கனை தங்கம் வென்று, அந்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். அந்த நாட்டிற்கு இதுதான் முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கம்.
Samayam Tamil ஃபுளோரா டஃபி


டஃபி சாதனை:

மகளிர்களுக்கான ட்ரையத்தியன் போட்டிகள் இன்று நடைபெற்றது. இதில், 33 வயதான பெர்முடா வீராங்கனை ஃபுளோரா டஃபி 55.36 நிமிடங்களில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றுள்ளார். பிரிட்டன் 2ஆவது இடத்தையும், அமெரிக்கா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

ட்ரையத்தின் போட்டி என்பது ஓட்டப் பந்தையும், சைக்கிளிங், நீச்சல் ஆகிய மூன்றையும் உள்ளடக்கியது.

மெகா சாதனை:

பெர்முடா இதற்குமுன், 1976ஆம் ஆண்டில்தான் ஒலிம்பிக் பதக்கம் வென்றிருந்தது. அதுவும் வெண்கலம் மட்டுமே. இந்த பதக்கத்தை கிளாரன்ஸ் கேஹில் என்பர் பெற்றுக்கொடுத்தார். அதன்பிறகு, 45 ஆண்டுகளுக்குப் பின் பெர்முடா ஒலிம்பிக் பதக்கம், அதுவும் தங்கப்பதக்கம் வென்று சாதித்துள்ளது. இதனை, அந்நாட்டு மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்