ஆப்நகரம்

ஒலிம்பிக் ஓட்டப் பந்தயம்: ஒரேயொரு நொடியில்…33 வருட சாதனை தகர்ப்பு..மெர்சல் ரெக்கார்ட்!

ஒரேயொரு நெடியில் 33 வருடச் சாதனையை முறியடித்துள்ளார் ஜமைக்கா நாட்டு வீராங்கனை.

Samayam Tamil 1 Aug 2021, 8:10 pm
டோக்கியோ ஒலிம்பிக் தொடரில், இன்று 100 மீட்டர் ஓட்டப் பந்தய இறுதிப் போட்டி நடைபெற்றது. இதற்கு ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட 8 பேர் தேர்வாகியிருந்தனர். விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில், ஜமைக்காவைச் சேர்ந்த மூன்று பேரும் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றி, உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர். ஒரேயொரு பதக்கம் வாங்கப் பல நாடுகள் திணறி வரும் நிலையில், ஒரே போட்டியில் மூன்று பதக்கத்தையும் வென்ற ஜமைக்கா வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
Samayam Tamil டோக்கியோ ஒலிம்பிக்


முதல் மூன்று இடம்:

ஜமைக்காவின் தாம்ப்சன் ஹெரா என்பவர் 10.61 நொடிகளில் 100 மீட்டரை கடந்து முதல் இடத்தைப் பிடித்தார். அடுத்து, ஜமைக்காவின் ஷெல்லி ஆன் பிரஷர் 10.74 நொடிகளில் கடந்து இரண்டாவது இடத்தையும், ஷெரிகா ஜாக்சன் 10.76 நொடிகளில் கடந்து மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். இதன்மூலம் ஒரே நாட்டைச் சேர்ந்த மூன்று வீராங்கனைகள் தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.

33 வருடங்களுக்குப் பிறகு:

ஒலிம்பிக் 100 மீட்டர் மகளிர் ஓட்டப் பந்தயத்தில், 1988-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த புளோரன்ஸ் க்ரிப்த் என்பவர் 10.62 நொடிகளில் கடந்ததே சாதனையாக இருந்தது. இதனை 33 வருடங்கள் கழித்து ஜமைக்காவின் தாம்ப்சன் ஹெரா (10.61 நொடிகள்) முறியடித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்