ஆப்நகரம்

Tokyo Olympic: பைனல் கனவு தகர்ந்தது…அரையிறுதியில் ஆடவர் ஹாக்கி அணி தோல்வி!

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி அரையிறுதிப் போட்டி இன்று நடைபெற்றது.

Samayam Tamil 3 Aug 2021, 9:40 am
32ஆவது ஓலிம்பிக் தொடர் ஜப்பன் தலைநகர் டோக்கியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று ஆடவருக்கான ஹாக்கி அறையிறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா, பெல்ஜியம் அணிகள் மோதின.
Samayam Tamil இந்திய ஹாக்கி அணி


41 ஆண்டுகளுக்குப் பிறகு:

இந்திய ஆடவர் ஹாக்கி அணி 41 ஆண்டுகளுக்குப் பிறகு அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தது. இதனால், இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

2 நிமிடத்தில் கோல்:

இந்தியா, பெல்ஜியம் மோதிய இந்த அரையிறுதி போட்டியில், பெல்ஜியம் அணி 2ஆவது நிமிடத்திலேயே கோல் அடித்து அசத்தியது. அதனைத் தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடத் துவங்கினர். 7ஆவது நிமிடத்தில் இந்தியாவின் ஹர்மன்பிரீத் கோல் அடித்தார். அடுத்து 8ஆவது நிமிடத்தில் மன்தீப் சிங் கோல் அடித்து, இந்தியாவை 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற வைத்தார்.

இதனைத் தொடர்ந்து பெல்ஜியம் வீரர் அலெக்சாண்டர் ஹென்ரிக்ஸ் ஹாட்ரிக் கோல் அடித்து 5-2 என்ற கணக்கில் பெல்ஜியத்தை முன்னிலைப் படுத்தினார். அதன்பிறகு யாரும் கோல் அடிக்கவில்லை. இந்திய அணி 5-2 என்ற கணக்கில் அரையிறுதியில் தோல்வியைச் சந்தித்துள்ளது. அடுத்து வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியா மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்