ஆப்நகரம்

tokyo olympics: கடைசி வரை சண்டை செஞ்ச மகளிர் ஹாக்கி அணி: கண்ணீரோடு விடைபெற்ற சம்பவம்!

வெண்கல கோப்பைக்காக நடைபெற்ற போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி தோல்வியைத் தழுவியது.

Samayam Tamil 6 Aug 2021, 9:21 am
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பிரிட்டனுக்கு எதிரான வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் இந்திய மகளிர் அணி தோல்வியடைந்தது.
Samayam Tamil indian hockey


பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் முடிவு இந்திய அணிக்கு எதிராக முடிந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

முதல் கால்பகுதியில் இரு அணிகளும் தீவிரமாக கோல் அடிக்க முயற்சித்தன. இந்திய மகளிர் அணியின் கீப்பர் சவிதா புனியா சிறப்பாக செயல்பட்டு பிரிட்டன் வீராங்கனைகளின் முயற்சிகளை தடுத்தார். முதல் 15 நிமிடங்களில் இரு அணிகளுமே கோல் அடிக்கவில்லை.
Tokyo Olympic: ‘மல்யுத்தம்’ இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்…ரவி தஹியா அசத்தல்!இரண்டாவது கால்பகுதியின் முதல் பகுதியில் பிரிட்டன் ஆதிக்கம் செலுத்தியது, இரண்டு கோல்கள் அடித்து அந்த அணி வீராங்கனைகள் கெத்து காட்டினர். ஆனால் சுதாரித்துக் கொண்ட இந்திய அணி அடுத்தடுத்து மூன்று கோல்களை அடித்து 3-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இதனால் உற்சாகத்துடன் மூன்றாவது கால் இறுதியில் களமிறங்கிய இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பிரிட்டன் அணி சிறப்பாக செயல்பட்டு கோல் அடிக்க முயன்றது. கீப்பர் சவிதா புனியா சிறப்பாக அதை தடுத்த போதும், அந்த அணி ஒரு கோல் அடித்து 3 - 3 என புள்ளிகளை சமன் செய்தது.

நான்காவது கால்பகுதியில் இரு அணிகளும் கோல் அடிக்க தீவிரம் காட்டின. பெனால்டி வாய்ப்பை பிரிட்டன் அணி கோலாக மாற்ற, இந்திய அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் 4 - 3 என்ற கணக்கில் பிரிட்டன் அணி வெற்றி பெற்றது.
Tokyo Olympic ‘4 தங்கம்’ மொத்தம் 7 பதக்கம் வென்று வீராங்கனை சாதனை! குவியும் வாழ்த்துக்கள்!
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் முடிவு இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. வீராங்கனைகளும் மைதானத்திலேயே கண்ணீர்விட்டு அழுதது தொலைக்காட்சி வழி பார்ப்பவர்களையும் கலங்க வைத்தது. இருப்பினும் ஒரு சிறப்பான ஆட்டத்தை பார்த்த திருப்தி அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் கட்டாயம் இருந்திருக்கும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்