ஆப்நகரம்

Tokyo Paralympics 2021: ‘அடி தூள்’ இந்தியாவுக்கு தங்கம்…அவனி லெகரா அபாரம்!

டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்திய வீராங்கனை தங்கம் வென்று அசத்தியுளார்.

Samayam Tamil 30 Aug 2021, 8:52 am
டோக்கியோ பாராலிம்பிக் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
Samayam Tamil அவனி லெகரா


டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம் இதுவாகும்.

19 வயதாகும் அவனி லெக்ரா,மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதி சுற்றில் மொத்தம் 249.5 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து, உலக சாதனையையும் படைத்துள்ளார். இதற்கு முன்னர் யாரும் 249 புள்ளிகளை தாண்டியது கிடையாது.

சீனாவின் சூபிங் ஜாங் 248.9 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தையும், உக்ரைனின் இரினா ஷ்செட்னிக் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

லகரா தங்கம் வென்றது எப்படி?

இறுதி சுற்றில் லகாரா தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு ஒவ்வொரு முறையில் 10 புள்ளிகளை பெற்றார். இரண்டு முறை மட்டுமே அவர் 10 புள்ளிகளுக்கு குறைவாக பெற்றார். இதனால்தான், அவரால் தங்கம் வெல்ல முடிந்தது. தகுதி சுற்றில் 621.7 புள்ளிகளை மட்டும் பெற்று 7ஆவது இடத்தை பிடித்த இவர், தற்போது தங்கம் வென்று அசத்தியிருப்பது, மிரட்டலான சாதனையாக பார்க்கப்படுகிறது.

பிரதமர் வாழ்த்து:
லகாரா தங்கம் வென்ற உடனே, பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் வெளியிட்டார். அதில், “வியக்கதக்க வகையில் செயல்பட்ட அவனி லகாராவுக்கு வாழ்த்துகள். கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி. இந்திய விளையாட்டுத் துறைக்கு சிறந்த தருணம் இது. எதிர்காலத்திலும் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியா தற்போதுவரை ஒரு தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்