ஆப்நகரம்

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வீரர்களுக்கு தண்டனை!

ரியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லாத வட கொரிய வீரர் வீராங்கனைகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

TNN 27 Aug 2016, 12:38 am
ரியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லாத வட கொரிய வீரர் வீராங்கனைகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil north korean olympians to be punished
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வீரர்களுக்கு தண்டனை!

ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் வட கொரியா சார்பாக 31 வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். அவர்கள் 2 தங்கம் உட்பட 7 பதக்கங்களை வென்று நாடு திரும்பியுள்ளனர்.

முன்னதாக, ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் 5 தங்கம் உட்பட 17 பதக்கங்களை வென்று வர வேண்டும் என்று வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அந்நாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு உத்தரவிட்டிருந்தார். ஆனால், வடகொரியா 2 தங்கம் உட்பட 7 பதக்கங்கள் மட்டுமே பெற்றுள்ளதால், அதிபர் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளார்.

இதனால், ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லாமல் நாடு திரும்பியவர்களுக்கு சுரங்கங்களில் கடுமையான வேலையை தண்டனையாகக் கொடுக்க இருப்பதாக அந்நாட்டு அரசு வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதனால், அந்நாட்டு ஒலிம்பிக் பங்கேற்பாளர்கள் கடும் பீதியில் உள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்