ஆப்நகரம்

பிவி சிந்து பதக்கம் வெல்வது உறுதி: பெண்களால் இந்தியாவுக்கு கவுரவம்!!

ஒலிம்பிக் போட்டியில் பேட்மின்டனுக்காக இந்தியாவிலேயே முதன் முதலாக பிவி சிந்து வெள்ளி அல்லது தங்கப்பதக்கம் நாளை பெற இருப்பது உறுதியாகி விட்டது.

TNN 18 Aug 2016, 10:08 pm
ஒலிம்பிக் போட்டியில் பேட்மின்டனுக்காக இந்தியாவிலேயே முதன் முதலாக பிவி சிந்து வெள்ளி அல்லது தங்கப்பதக்கம் நாளை பெற இருப்பது உறுதியாகி விட்டது.
Samayam Tamil p v sindhu will be the first indian woman badminton player to win a gold or silver in olympics
பிவி சிந்து பதக்கம் வெல்வது உறுதி: பெண்களால் இந்தியாவுக்கு கவுரவம்!!

பிரேசிலில் கடந்த 5ஆம் தேதி ரியோ ஒலிம்பிக் போட்டி துவங்கி நடந்து வருகிறது. எந்தப் போட்டியிலும் இந்தியா பதக்கம் பெறாத நிலையில் நேற்று 58 கிலோ எடைப் பிரிவுக்கான மல்யுத்தப் போட்டியில் சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் பெற்று இந்தியாவுக்கு கவுரவத்தை தேடிக் கொடுத்தார். இந்நிலையில், இன்று, பெண்கள் ஒற்றையர் பேட்மின்டன் அரை இறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனையை சிந்து எளிதாக தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளார்.

இதன்மூலம் நாளை நடைபெற இருக்கும் இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளி அல்லது தங்கப் பதக்கம் கிடைப்பது உறுதியாகிவிட்டது.

சிந்து பதக்கம் வெல்லும்போது, ஒலிம்பில் பேட்மின்டன் போட்டியில் பதக்கம் வெல்லும் முதல் இந்திய வீராங்கனையாக சிந்து வலம் வருவார். அதே சமயம் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் 5வது பதக்க மகளாக வலம் வருவார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்