ஆப்நகரம்

மகிழ்ச்சிதான் ஆனால் வேதனையாக இருக்கு: சிந்து உணர்ச்சிகரமான பேச்சு!

டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

Samayam Tamil 2 Aug 2021, 11:02 am
டோக்கியோ ஒலிம்பிக், மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் காலிறுதி சுற்றுவரை ஒரு செட்டில் கூட தோற்காமல் பி.வி.சிந்து அதிரடியாக விளையாடி அசத்தினார். அடுத்து அரையிறுதிப் போட்டி நடைபெற்றது. இதிலும் சிந்து அபாரமாகச் செயல்படுவார் என எதிர்பார்த்த நிலையில், இரண்டு செட்களில் தோற்று தங்கம், வெள்ளி வெல்லும் வாய்ப்பை இழந்தார்.
Samayam Tamil பி.வி.சிந்து


அடுத்து, மறுநாள் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி நடைபெற்றது. இதில் சிறப்பாக விளையாடிய சிந்து சீன வீராங்கனையை 21-13, 21-15 என்ற கணக்கில் வீழ்த்தி, வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். இந்தியாவுக்காக, தனி நபர் போட்டிகளில் இரண்டு பதக்கம் வென்று கொடுத்தவர் இவர் மட்டுமே.

இப்போட்டி குறித்து தற்போது பேட்டிகொடுத்துள்ள சிந்து, “நான் இந்த ஒலிம்பிக் தொடருக்காகப் பல வருடங்கள் உழைத்தேன். என்னுடைய பல வருட உழைப்பிற்கு பலம் கிடைத்திருப்பது மகிழ்ச்சிதான். நான் வெண்கலம் வென்றதற்காக சந்தோசப்படுவதா அல்லது இறுதிப் போட்டிக்குச் செல்ல முடியாததை நினைத்து வருத்தப்படுவதா எனத் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை இந்த ஒலிம்பிக் தொடரில் நான் சிறப்பாக விளையாடினேன். என்னுடைய குடும்பம் எனக்கு உதவிக்கரமாக இருந்தது. இந்தியாவுக்காகப் பதக்கம் வென்றுள்ளேன் என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அனைவருக்கும் நன்றி” எனத் தெரிவித்தார்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்