ஆப்நகரம்

வெள்ளியுடன் நீதா அம்பானியை சந்தித்த சிந்து

ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற கையோடு நீதா அம்பானியை சந்தித்து வாழ்த்து பெற்றார் சிந்து.

TNN 20 Aug 2016, 1:51 am
ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற கையோடு நீதா அம்பானியை சந்தித்து வாழ்த்து பெற்றார் சிந்து.
Samayam Tamil pvsindhu met nita ambani in rio after she bagged first ever olympic silver in badminton for india
வெள்ளியுடன் நீதா அம்பானியை சந்தித்த சிந்து


நேற்று நடந்த பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து ஸ்பெயின் நாட்டின் கரோலினா மரினா உடன் மோதினார். இதில் கரோலினா 2வது செட் மற்றும் 3வது செட்களில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

கரோலினாவுடன் கடுமையாக போராடிய சிந்து வெள்ளிப்பதக்கம் பெற்றார். இந்நிலையில், பதக்கம் வாங்கிய கையோடு ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர் நீதா அம்பானியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பேட்மிண்டன் இறுதிப் போட்டி தொடங்குவதற்கு முன்பாக சிந்துவை சந்தித்த நீதா அம்பானி, இந்தியாவை நீ பெருமை அடையச் செய்வாய் என்றும், இறுதிப் போட்டியில் தங்கம் வெல்ல எனது வாழ்த்துக்கள் என்றும் கூறியுள்ளா என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்