ஆப்நகரம்

சிந்து சரித்திர சாதனை; ஒலிம்பிக் பேட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம்!

: ரியோ ஒலிம்பிக்ஸ் பேட்மிண்டனில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினாவிடம் தோல்வியடைந்த இந்தியாவின் சிந்து வெள்ளிப்பதக்கம் கைப்பற்றி ஆறுதல் அளித்தார்.

TOI Sports 19 Aug 2016, 9:57 pm
ரியோ: ரியோ ஒலிம்பிக்ஸ் பேட்மிண்டனில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினாவிடம் தோல்வியடைந்த இந்தியாவின் சிந்து வெள்ளிப்பதக்கம் கைப்பற்றி ஆறுதல் அளித்தார்.
Samayam Tamil rio olympics sindhu wins silver
சிந்து சரித்திர சாதனை; ஒலிம்பிக் பேட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம்!


பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் 31வது ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கோலாகலமாக நடக்கிறது. இதில் நட்சத்திர நாயகர்களான சானியா மிர்சா, பயஸ், ககன் நரங் உள்ளிட்டோர் ஏமாற்ற, இந்தியா பதக்கபட்டியலிலாவது இடம் பிடிக்குமா என்ற ஏக்கம் ரசிகர்களின் மத்தியில் எழுந்தது.

இதை போக்கும் வகையில் மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி, வெண்கலம் வென்று சாதித்தார். பின் திடீர் புயலாக வீசிய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, உலகின் முன்னணி நட்சத்திர வீராங்கனைகளை அசால்டாக வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறி மற்றொரு பதக்கத்தை உறுதி செய்தார்.

இன்று நடந்த பைனலில், இந்தியாவின் சிந்து, உலகின் ‘நம்பர்-1’ வீராங்கனையான ஸ்பெயினின் கரோலினா மரினை சந்திதார். இதில் துவக்கம் முதல் அசத்திய சிந்து, முதல் செட்டை, 21-19 என வென்றார். பின் இரண்டாவது செட்டில் சொதப்பிய சிந்து 12-21 என இழந்தார். வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் கடுமையாக போட்டி நிலவ விட்டுக்கொடுக்காத சிந்து வெற்றிக்காக கடைசிவரை போராடினார். இருப்பினும் அடங்காமல் ஆதிக்கம் செலுத்திய கரோலின் கஷ்டப்பட்டு 21-15 என கைப்பற்றினார்.


இறுதியில், இந்தியாவின் சிந்து, , 21-19, 12-21, 21-15 என ஸ்பெயினின் கரோலினாவிடம் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்