ஆப்நகரம்

சாக்ஷி மாலிக்கிற்கு டுவிட்டரில் குவியும் வாழ்த்துக்கள்

ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக்கிற்கு டுவிட்டரில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

TNN 18 Aug 2016, 6:15 am
புதுதில்லி: ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக்கிற்கு டுவிட்டரில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
Samayam Tamil sakshi malik gets congrats in twitter
சாக்ஷி மாலிக்கிற்கு டுவிட்டரில் குவியும் வாழ்த்துக்கள்


ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தின் 58 கிலோ எடை "பிரீ ஸ்டைல்" பிரிவில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில், கிர்கிஸ்தான் வீராங்கனை ஐசுலு டைனிபிகோவா உடன் மோதிய இந்தியாவின் சாக்ஷி மாலிக், அவரை தோற்கடித்து வெண்கலப் பதக்கத்தை தட்டி சென்று சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில், இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெற்றுத் தந்துள்ள சாக்ஷி மாலிக்கிற்கு டுவிட்டரில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

Heartiest congratulations to Haryana's wrestler Sakshi Malik for winning India's first medal at #RioOlympics! The nation is proud of you!— Manohar Lal (@mlkhattar) August 17, 2016
ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர், சாக்ஷி மாலிக்கிற்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள் என்றும், அவரை நினைத்து இந்த நாடே பெருமைப் படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Congratulations to Sakshi Malik!!!.Wins First #Olympics #Bronze Medal for #IND in #Rio2016 #Kudos #proud #wrestling pic.twitter.com/foazEeuYDm— Vijay Goel (@VijayGoelBJP) August 17, 2016
அதேபோல், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை இணையமைச்சர் விஜய் கோயல், குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் உள்ளிட்ட பலரும் தங்களது டுவிட்டர் பக்கத்தில் வாழ்துக்களை பதிவு செய்துள்ளனர்.

Congratulation #SakshiMalik Be strong #Rio2016 #wrestling #KheloIndia— Mary Kom (@MangteC) August 17, 2016
மேலும், டுவிட்டரில் சாக்ஷி மாலிக் டிரெண்டாகி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்