ஆப்நகரம்

மணற்சிற்பத்தில் சாக்‌ஷி மாலிக்கிற்கு வாழ்த்து தெரிவித்த சுதர்சன் பட்நாயக்

ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை சாக்‌ஷி மாலிக் பெற்றுத் தந்துள்ளார். இதனை பாராட்டும் வகையில் இந்திய மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் சாக்‌ஷி மாலிக் மல்யுத்தம் செய்வது போல் மணற்சிற்பம் அமைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

TNN 18 Aug 2016, 10:58 pm
ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை சாக்ஷி மாலிக் பெற்றுத் தந்துள்ளார். இதனை பாராட்டும் வகையில் இந்திய மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் சாக்ஷி மாலிக் மல்யுத்தம் செய்வது போல் மணற்சிற்பம் அமைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Samayam Tamil sand art is portraying sakshi malik the one who has won bronze medal for india
மணற்சிற்பத்தில் சாக்‌ஷி மாலிக்கிற்கு வாழ்த்து தெரிவித்த சுதர்சன் பட்நாயக்


ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தின் 58 கிலோ எடை "பிரீ ஸ்டைல்" பிரிவில் நடந்த ரெபிசாஜ் சுற்றில், மங்கோலிய வீராங்கனை ஒர்ஹான் புர்வித்ஜ்ஜை 12-3 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்து வெண்கலப் பதக்கத்திற்கான போட்டிக்கு தகுதி பெற்றார்.

வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் கிர்கிஸ்தான் வீராங்கனை ஐசுலு டைனிபிகோவா உடன் மோதிய சாக்ஷி மாலிக், அவரை தோற்கடித்து வெண்கலப் பதக்கத்தை தட்டி சென்று சாதனை படைத்துள்ளார். இந்நிலையில், இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்றுத்தந்த மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்கிற்கு மணற்சிற்பம் மூலம் சுதர்சன் பட்நாயக் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்