ஆப்நகரம்

நீச்சல் போட்டி : சிவானி கடாரியா அரையிறுதி வாய்ப்பை இழந்தார்

பெண்களுக்கான 200மீட்டர் நீச்சல் போட்டியில் இந்தியாவின் சிவானி கடாரியா அரையிறுதி போட்டிகு நுழையும் வாய்ப்பை இழந்தார்.

TNN 9 Aug 2016, 12:03 am
ரியோ : பெண்களுக்கான 200மீட்டர் நீச்சல் போட்டியில் இந்தியாவின் சிவானி கடாரியா அரையிறுதி போட்டிகு நுழையும் வாய்ப்பை இழந்தார்.
Samayam Tamil swimmer shivani kataria finishes 2nd in her womens 200m freestyle heat
நீச்சல் போட்டி : சிவானி கடாரியா அரையிறுதி வாய்ப்பை இழந்தார்

பிரேசிலில் 31வது ஒலிம்பிக் போட்டி நடந்து வருகின்றது. 3வது நாளான இன்று நடைபெற்ற பெண்களுக்கான 200 மீட்டர் நீச்சல் ஃப்ரி ஸ்டைல் பிரிவின் தகுதிச் சுற்று போட்டியின் ஹீட் 1ல் பங்கேற்ற இந்திய நீச்சல் வீராங்கனை ஷிவானி கடாரியா 2:09:30 நிமிடங்களில் இலக்கை 2வது ஆளாக அடைந்தார்.

இதனால் அரையிறுதிக்கு நுழையும் வாய்ப்பு உள்ளதாக கருதப்பட்டது. இருப்பினும் அடுத்து நடைபெற்ற தகுதி சுற்றுகளில் பங்கேற்ற வெளிநாட்டு வீராங்கனைகள் குறைந்த நிமிடங்களில் இலக்கை கடந்ததால், அரையிறுத்திக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்