ஆப்நகரம்

சிந்து போனை முதலில் திருப்பி கொடுக்க போறேன்: கோபிசந்த் !

இந்திய பேட்மிண்டன் அரங்கில் புதிய வரலாறு படைத்த சிந்துவின் போனை திருப்பிக்கொடுப்பதே எனது முதல் வேலை என அவரது பயிற்சியாளர் கோபிசந்த் கூறியுள்ளார்.

TOI Sports 20 Aug 2016, 1:27 pm
ரியோ: இந்திய பேட்மிண்டன் அரங்கில் புதிய வரலாறு படைத்த சிந்துவின் போனை திருப்பிக்கொடுப்பதே எனது முதல் வேலை என அவரது பயிற்சியாளர் கோபிசந்த் கூறியுள்ளார்.
Samayam Tamil will return sindhus phone let her enjoy ice cream says elated coach gopichand
சிந்து போனை முதலில் திருப்பி கொடுக்க போறேன்: கோபிசந்த் !


பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் 31வது ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், இந்திய வீராங்கணை பி.வி.சிந்தும், உலகின் நம்பர்-1 வீராங்கனையான ஸ்பெயினின் கரோலினாவிடம் கடினமாக போராடி தோல்வியடைந்தார். இருப்பினும் வெள்ளிப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற புது வரலாறு படைத்து சாதித்தார்.

கடந்த சில மாதங்களாக இதற்காக கடினமாக பயிற்சிமேற்கொண்ட சிந்துவுக்கு, தற்போது முழு சுதந்திரம் அளிக்கப்போவதாக அவரது பயிற்சியாளர் கோபிசந்த் கூறியுள்ளார்.

இது குறித்து கோபிசந்த கூறியது:
சிந்துவுக்கு கொடுத்த மிஷனை அவர் சிறந்த முறையில் முடித்து விட்டார். தற்போது மூன்று மாதத்துக்கு முன் அவரிடம் இருந்து வாங்கி வைத்திருந்த அவரது போனை திருப்பி கொடுப்பது தான் எனது முதல் வேலை. அப்போது தான் அவர் வாட்ஸ் ஆப் மூலம் அவருடைய நண்பர்களுடன் மனதுக்கு பிடித்தது போல உரையாட முடியும்.

தயிரில் சர்க்கரை சேர்த்து சாப்பிட அவருக்கு பிடிக்கும், ஆனால் கடந்த சில வாரங்களாக அவருடைய உடல் நலன்கருதி நான் அதையும் நான் நிறுத்திவிட்டேன். தற்போது தயிருடன், அவருக்கு பிடித்த ஐஸ் கிரீமும் சாப்பிட அனுமதிக்க உள்ளேன்.
இவ்வாறு கோபிசந்த் கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்