ஆப்நகரம்

முதன் முறையாக தோல்வியை சந்தித்த வில்லியம்ஸ் சகோதரிகள்!

டென்னிஸ் பெண்கள் இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் வில்லியம்ஸ் சகோதரிகள் முதன்முறையாக தோல்வியை சந்தித்துள்ளனர்.

TNN 8 Aug 2016, 6:11 am
ரியோ :டென்னிஸ் பெண்கள் இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் வில்லியம்ஸ் சகோதரிகள் முதன்முறையாக தோல்வியை சந்தித்துள்ளனர்.
Samayam Tamil williams sisters lose in olympic doubles for 1st time
முதன் முறையாக தோல்வியை சந்தித்த வில்லியம்ஸ் சகோதரிகள்!


பிரேசில் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான இரட்டையர் போட்டியில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் மற்றும் வீணஸ் வில்லியம்ஸ் சகோதரிகள் இணை, கட்ச் குடியரசை சேர்ந்த சபரோவா மற்றும் பார்போரா ஸ்ரைகோவா இணையோடு ஞாயிறுக் கிழமை மோதியது.

இதில் சிறப்பாக விளையாடிய கட்ச் குடியரசு வீராங்கனைகள் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்க வில்லியம்ஸ் சகோதரிகளை வீழ்த்தி அதிர்ச்சியை அளித்தனர்.

🇨🇿 @LucieSafarova & @BaraStrycova knock out defending #Olympics Gold medalist Serena/Venus 6-3, 6-4! #Rio2016 pic.twitter.com/LDYABLy7Tw— WTA (@WTA) August 7, 2016

வில்லியம்ஸ் சகோதரிகள் இணை இதுவரை ஒலிம்பிக் போட்டிகளில் 15 முறை தொடர்ச்சியாக வெற்றிபெற்று சாதனை செய்திருந்தனர். அதோடு 2000, 2008, 2012 ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளனர்.
நம்பர் 1 இணை வீராங்கனைகளான வில்லியம்ஸ் சகோதரிகளை வீழ்த்தியதன் மூலம் கட்ச் வீராங்கனைகள் தங்கப் பதக்கத்தை வெல்வார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்