ஆப்நகரம்

12 வயதில் கிளம்பிய அடுத்த பெண் உசைன் போல்ட்

ஜமைக்காவை சேர்ந்த உசேன் போல்ட் மின்னல் வேகத்தில் ஓடி தடகளத்தில் பல தங்கப்பதக்கங்களை வென்றவர். அதோடு உலக சாதனைகளையும் படைத்துள்ளார். அவரை பின்பற்றும் வகையில், ஜமைக்காவை சேர்ந்த பிரியன்னா லிஸ்டன் தன் 12 வயதில் தடகளத்தில் சாதனை படைத்து வருகின்றார்.

TOI Sports 6 Apr 2017, 5:42 am
ஜமைக்காவை சேர்ந்த உசேன் போல்ட் மின்னல் வேகத்தில் ஓடி தடகளத்தில் பல தங்கப்பதக்கங்களை வென்றவர். அதோடு உலக சாதனைகளையும் படைத்துள்ளார். அவரை பின்பற்றும் வகையில், ஜமைக்காவை சேர்ந்த பிரியன்னா லிஸ்டன் தன் 12 வயதில் தடகளத்தில் சாதனை படைத்து வருகின்றார்.
Samayam Tamil 12 yr old runs 200m in 23 sec misses world record by 2 sec
12 வயதில் கிளம்பிய அடுத்த பெண் உசைன் போல்ட்

ஜமைக்காவில் 13 வயதுக்கு உட்பட்டவர்கள் பங்கேற்ற U-13 2017தடகளப்போட்டி நடைப்பெற்றது. இதில் பங்கேற்ற 12 வயதான பிரியன்னா உலக சாதனையை விட சற்றே குறைவான வேகத்தில் ஓடி சாதனை படைத்துள்ளார்.

இவர் 200 மீ பெண்கள் ஓட்டப்பந்தயத்தில் 23.72 நொடிகளில் இலக்கை கடந்து சாதனை படைத்துள்ளார். இவரின் வேகம், 1988ல் சியோலில் நடந்த ஒலிம்பிக் போட்டியின் போது புலோரன்ஸ் கிரிப்பித் 21.34 நொடிகளில் ஓடி உலக சாதனை படைத்ததை 2 நொடிகள் மட்டுமே அதிகமானது.

இவரின் அதிவேக ஓட்டத்தை பார்த்த அந்நாட்டு தடகள அமைப்பு, ஜமைக்காவுக்கு அடுத்த உசைன் போல்டை போன்ற பெண் வீராங்கனை கிடைத்து விட்டார் என பூரிப்படைந்துள்ளனர்.

இதே போன்று 2001ல் நடந்த போட்டித்தொடரில் தான் உசைன் போல்ட் தன் பள்ளி வாழ்க்கையில் முதல் பதக்கத்தை வென்றாராம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்