ஆப்நகரம்

நம்பிக்கையின் சிகரம் : சேலையில் 42 கி.மீ மாராத்தான் போட்டியில் கலந்து கொண்ட பெண்

பெண்கள் எதற்கும் சலைத்தவர்கள் அல்ல, அதோடு ஒரு விஷயத்திற்காக போராட வேண்டுமென்றால் அதற்கு தயங்காமல் போராடுபவர்கள் என ஜெயந்தி சம்பத் குமார் என்ற பெண் நிரூபித்துள்ளார்.

TOI Sports 22 Aug 2017, 6:47 pm
ஐதராபாத் : பெண்கள் எதற்கும் சலைத்தவர்கள் அல்ல, அதோடு ஒரு விஷயத்திற்காக போராட வேண்டுமென்றால் அதற்கு தயங்காமல் போராடுபவர்கள் என ஜெயந்தி சம்பத் குமார் என்ற பெண் நிரூபித்துள்ளார்.
Samayam Tamil 44 year old woman completes 42 km marathon in sari
நம்பிக்கையின் சிகரம் : சேலையில் 42 கி.மீ மாராத்தான் போட்டியில் கலந்து கொண்ட பெண்


ஐதராபாத்தில் கடந்த ஞாயிறு அன்று நடந்த 42 கி.மீ தூர மாராத்தான் போட்டியில் ஜெயந்தி சேலையுடன் கலந்துகொண்டார். மொத்தம் 20,000 பேர் கலந்து கொண்ட அந்த போட்டியில் அனைவரும், பேண்ட், டிரவுசர், டீசர்ட் என அணிந்து பங்கேற்றனர்.

ஆனால் அதில் கலந்து கொண்ட ஜெயந்தி மட்டும் சேலையில் கலந்து கொண்டார். கலந்து கொண்டது மட்டுமில்லாமல், அந்த போட்டியை வெற்றிகரமாக முடித்துள்ளார்.



ஜெயந்தி கூறியதாவது :
கைவினை பொருட்களை ஊக்குவிப்பதற்காகவும், பெண்கள் எதற்கும் சலைத்தவர்கள் அல்ல என்பதை அனைவருக்கும் உணர்த்துவதற்காகவும் தான் சேலையில் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டதாக தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து கின்னஸ் சாதனைக்காக விண்ணப்பித்துள்ளேன் என தெரிவித்துள்ளார்

அடுத்த செய்தி

டிரெண்டிங்