ஆப்நகரம்

ஹீமாவின் ஆங்கிலம் சுமார்- டுவிட்டுக்கு மன்னிப்பு கேட்ட இந்திய தடகள சம்மேளனம்

தடகளத்தில் தங்கம் வென்று கொடுத்த ஹீமா தாஸின் ஆங்கிலத்தில் பேசும் விதம் குறித்து இந்திய தடகள சம்மேளனம் சர்ச்சைக்குறிய டுவிட் செய்துள்ளதற்கு பலர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

Samayam Tamil 14 Jul 2018, 11:25 am
தடகளத்தில் தங்கம் வென்று கொடுத்த ஹீமா தாஸின் ஆங்கிலத்தில் பேசும் விதம் குறித்து இந்திய தடகள சம்மேளனம் சர்ச்சைக்குறிய டுவிட் செய்துள்ளதற்கு பலர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
Samayam Tamil hima


19 வயதுக்குட்பட்டோருக்கான சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் தொடர் ஜூலை 10-15ம் தேதி வரை நடைப்பெறுகிறது.

இதில் கலந்து கொண்ட இந்திய பெண் வீராங்கனை ஹீமா தாஸ் 400 மீ ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்று சாதித்துள்ளார்.

தங்கம் வெல்வதற்கு முன் ஹீமாவை விமர்சித்த இந்திய தடகள அமைப்பு :

சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் தொடரின் பெண்களுக்கான 400 மீ அரையிறுதிப் போட்டி ஜூலை 12ம் தேதி நடைப்பெற்றது. அதில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஹீமாவிடம் செய்தியாளர்கள் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டனர். அதற்கு ஹீமா ஆங்கிலத்தில் பதிலளித்தார்.


இதுகுறித்து டுவிட் செய்த இந்திய தடகள சம்மேளனம், “ஹீமா அரையிறுதிக்கு முன்னேறியது மகிழ்ச்சி. இருப்பினும் அவர் ஆங்கிலத்தி சரளமாக பேசவில்லை” என பதிவிட்டிருந்தது.

ஹீமா தங்கம் வென்ற விதம் வீடியோவை மோடி பகிர்ந்துள்ளார்.




இதையடுத்து பலரும் இந்திய தடகள சம்மேளனத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். திறமையை பாருங்கள், ஆங்கில புலமையைப் பார்க்காதீர்கள் என கருத்து தெரிவித்து வருகின்றனார். அவரால் இந்திய நாடே பெருமையடைந்துள்ளது என கூறி வருகின்றனர்.


இதைத் தொடர்ந்து இந்திய தடகள சம்மேளனம் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்