ஆப்நகரம்

நெதர்லாந்து ஓபன்: அரையிறுதியில் அஜெய் ஜெயராம் !

நெதர்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதிக்கு இந்தியாவின் அஜெய் ஜெயராம் தகுதி பெற்றார்.

TOI Sports 15 Oct 2016, 12:08 pm
அல்மேரி: நெதர்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதிக்கு இந்தியாவின் அஜெய் ஜெயராம் தகுதி பெற்றார்.
Samayam Tamil ajay jayaram reaches semifinals of dutch open
நெதர்லாந்து ஓபன்: அரையிறுதியில் அஜெய் ஜெயராம் !


நெதர்லாந்தின் அல்மேரியில் நெதர்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு, காலிறுதியில் இந்தியாவின் அஜெய் ஜெயராம், பிரேசிலின் ஆலிவேரியாவை எதிர்கொண்டார்.

இதில் துவக்கம் முதல் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெயராம் முதல் செட்டை, 21-15 என வென்றார். தொடர்ந்து நடந்த இரண்டாவது செட்டிலும், அசத்திய ஜெயராம், 21-18 என தன்வசப்படுத்தினார்.

முடிவில்,இந்தியாவின் அஜெய் ஜெயராம், பிரேசிலின் ஆலிவேரியாவை 21-15, 21-18 என்ற நேர் செட்களில் வீழ்த்தி, அரையிறுதிக்கு தகுதி பெற்றார். அரையிறுதியில் இவர், டென்மார்க்கின் அண்டோசென்னை எதிர்கொள்கிறார்.

இதேபோல கலப்பு இரட்டையர் பிரிவில், இந்தியாவின் பிரனவ் சோப்ரா, சிக்கி ரெட்டி ஜோடி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்