ஆப்நகரம்

ஆல்ஃபா ரோமியோ புதிய கார் வெளியீடு!

ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தின் அணியான ஆல்ஃபா ரோமியோ 2021 ஆம் ஆண்டிற்கான காரை வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 23 Feb 2021, 9:27 pm
ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தை வருகின்ற மார்ச் மாதம் இறுதியில் துவங்க இருப்பதை முன்னிட்டு ஒவ்வொரு அணிகளும் தங்களது காரை வெளியிட்டு வருகின்றனர் இந்நிலையில் ஆல்ஃபா ரோமியோ அணியினர் புதிய சீசனுக்கான தங்களது காரை வெளியிட்டுள்ளனர். 1985 ஆம் ஆண்டிற்குப் பின் 2019 ஆம் ஆண்டு ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் திரும்பிவந்த ஆல்ஃபா ரோமியோ அணி கடந்த இரு வருடங்களாக சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 8வது இடத்தை பிடித்துள்ளது.
Samayam Tamil ஆல்ஃபா ரோமியோ
ஆல்ஃபா ரோமியோ


2019ஆம் ஆண்டு மற்றும் 2020ஆம் ஆண்டு ஆல்ஃபா ரோமியோ அணி சார்பாக களமிறங்கிய ஜியோவினாஸ்சி மற்றும் ராய்கின்னன் ஆகியோர் மீண்டும் 2021 ஆம் ஆண்டிற்கும் களம் இறங்குகிறார்கள். 2001ஆம் ஆண்டு ஃபார்முலா 1 பந்தயத்தில் காலடி எடுத்து வைத்த ராய்கின்னன்னிர்க்கு இந்த ஆண்டு அவர் காலடி எடுத்து வைத்து 20ஆவது ஆண்டாக அமைகிறது.

2007ஆம் ஆண்டு ஃபெராரி அணி சார்பாக போட்டியிட்டு சாம்பியன் பட்டம் வென்ற ராய்கின்னன் 2019ஆம் ஆண்டு ஆல்ஃபா ரோமியோ அணியில் இணைந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளோடு களமிறங்கிய அவர் கடந்த இரண்டு சீசனாக 12வது இடம் மற்றும் 16வது இடம் மட்டுமே பிடித்து ஏமாற்றமாக அமைந்தது. 2018 ஆம் ஆண்டு ஃபெராரி அணிக்காக போட்டியிட்டு மூன்றாம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

இறுதி நிமிடத்தில் கோல் அடித்து மோகன் பேகன் டிரா: ஹைதராபாத் அணி ஏமாற்றம்
புதிய கார் வெளியீட்டு விழாவில் பேசிய அவர் இந்த ஆண்டு முதல் 10 இடத்திற்குள் வருவது சிறப்பாக இருக்கும் என்று தெரிவித்தார். 2019 ஆம் ஆண்டு 57 புள்ளிகள் குவித்த ஆல்ஃபா ரோமியோ 2020ஆம் ஆண்டு 8 புள்ளிகள் மட்டுமே குவித்தது. அதிக எதிர்பார்ப்புகளுடன் 2019ஆம் ஆண்டு ஃபார்முலா ஒன் பந்தயத்தில் ரீ என்ட்ரி கொடுத்த ஆல்ஃபா ரோமியோ கடந்த இரு ஆண்டுகளாக ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது, இந்த ஆண்டு எந்த அளவிற்கு எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்