ஆப்நகரம்

கோபத்தில் கொழுந்துவிட்டு எரிந்த ஆண்டி முர்ரே!

சீன ஓபன் டென்னிஸ் தொடரின் பைனலில் தனது விளையாட்டு குறிப்புகளை போக்கஸ் செய்த கேமிரா மேன் மீது அனலை கக்கியுள்ளார் ஆண்டிமுர்ரே.

TOI Contributor 14 Oct 2016, 2:50 pm
ஷாங்காய்: சீன ஓபன் டென்னிஸ் தொடரின் பைனலில் தனது விளையாட்டு குறிப்புகளை போக்கஸ் செய்த கேமிரா மேன் மீது அனலை கக்கியுள்ளார் ஆண்டிமுர்ரே.
Samayam Tamil andy murray fumes after his private match notes are revealed on tv during china open final
கோபத்தில் கொழுந்துவிட்டு எரிந்த ஆண்டி முர்ரே!


சினாவின் ஷாங்காயில் ஆண்களுக்கான சீன ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் பைனலில் , பிரிட்டன் வீரர் ஆண்டி முர்ரே, பல்கேரியாவின் கிரிகோர் திமித்ரோவை எதிர்கொண்டார். இப்போட்டியில் ஆண்டி முர்ரே வெற்றி பெற்று சாம்பியன்பட்டத்தை கைப்பற்றினார்.

ஆனால், இப்போட்டியின் இடைவேளையின் போது, தனது விளையாட்டு குறிப்புகளை வெளிப்படுத்திய டி-வி கேமிரா மேன் மீது கடுமையாக கேவப்பட்டுள்ளார், முர்ரே.


இதுகுறித்து ஆண்டி முர்ரே கூறியது:
நான் என்னுடைய பேக்கில் வைத்திருந்த போட்டி குறிப்புகளை நோக்கி கேமிராவை எந்தளவு ஜூம் செய்ய முடியுமோ, அந்தளவு ஜூம் செய்துவிட்டனர். கேமிராவை என்மீது எங்கு வைத்தாலும் எனக்கு கவலையில்லை. ஆனால் வீரரின் பேக்கிற்குள் கேமிரா எடுக்க கூடாது என கேமிரா மேனிக்கு தெரிய வேண்டும். மற்றவர்களை மதிக்க கற்றுக்கொண்டால் எந்த பிரச்சனையும் வராது.
இவ்வாறு ஆண்டி முர்ரே கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்