ஆப்நகரம்

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: தங்கம் வென்றார் அர்ச்சனா ஆதவ்

ஒரிசாவில் நடக்கும் ஆசிய தடகள சாம்பின்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை அர்ச்சனா ஆதவ் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

TNN 9 Jul 2017, 7:07 pm
ஒரிசாவில் நடக்கும் ஆசிய தடகள சாம்பின்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை அர்ச்சனா ஆதவ் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
Samayam Tamil archana adhav wins gold and jinson johnson wins bronze in asian athletics championship
ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: தங்கம் வென்றார் அர்ச்சனா ஆதவ்


ஒரிசா தலைநகர் புவனேஸ்வரில் நடைபெறும் 22வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தையப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற வீராங்கனை அர்ச்சனா ஆதவ் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

ஆண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தையத்தில் இந்திய வீரர் ஜின்சன் ஜான்சன் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார். மகளிருக்கான 800 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை பூர்ணிமா ஹெம்ராம் வெண்கலப் பதக்கம் வெற்றிருக்கிறார்.

இத்தொடரில் இந்திய வீரர் வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கங்களைக் குவித்து வருவது குறிப்பிடத்தக்கது. சீனா, ஜப்பான், தென்கொரியா, பாகிஸ்தான் உள்பட 45 நாடுகள் பங்கேற்றுள்ள ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டிருக்கின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்