ஆப்நகரம்

ஆசியக் கோப்பை ஹாக்கி: அரையிறுதியில் இந்திய அணி

மகளிருக்கான ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி கஜகஸ்தான் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

TNN 2 Nov 2017, 4:27 pm
மகளிருக்கான ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி கஜகஸ்தான் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
Samayam Tamil asia cup hockey indian women into semi finals with 7 1 rout of kazakhstan
ஆசியக் கோப்பை ஹாக்கி: அரையிறுதியில் இந்திய அணி


ஜப்பானின் காகம்கிகஹராவில் நேற்று நடைபெற்ற மகளிருக்கான ஆசியக் கோப்பை ஹாக்கி தொடரின் காலிறுதியில் இந்திய அணி கஜகஸ்தான் அணியை எதிர்கொண்டது.

அபாரமாக விளையாடிய கோல் வேட்டை நடத்திய இந்திய வீராங்கனைகள் 7 கோல்கள் அடித்து மிரட்டினர். கஜகஸ்தான் அணியின் சார்பில் டொமாஸ்நெவா மட்டும் ஒரே ஒரு கோல் போட்டார்.

இறுதியில் இந்திய அணி 7-1 என வெற்றி பெற்று அரையிறுதியில் நுழைந்துள்ளது. முன்னதாக லீக் சுற்றில் சிங்கப்பூரை 10-1 எனவும் சீனாவை 4-1 எனவும் மலேசியாவை 2-0 எனவும் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்