ஆப்நகரம்

இந்த வயதிலும் கற்றுக்கொள்ள ஆசைப்படும் பயஸ்!

தனது 43வது வயதிலும் டென்னிசில் கற்றுக்கொள்ள ஆசைப்படுவதாக இந்திய வீரர் லியாண்டர் பயஸ் கூறியுள்ளார்.

TOI Sports 13 Sep 2016, 2:59 pm
புதுடில்லி: தனது 43வது வயதிலும் டென்னிசில் கற்றுக்கொள்ள ஆசைப்படுவதாக இந்திய வீரர் லியாண்டர் பயஸ் கூறியுள்ளார்.
Samayam Tamil at 43 after 18 grand slams leander paes wants to learn from rafael nadal
இந்த வயதிலும் கற்றுக்கொள்ள ஆசைப்படும் பயஸ்!


இந்திய டென்னிஸ் அரங்கில் சுமார் 18 கிராண்ட்ஸ்லாம் பட்டம், ஒலிம்பிக் பதக்கம் என நட்சத்திர வீரராக ஜொலிக்கும் லியாண்டர் பயஸ், இளம் வீரர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய விஷயம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பயஸ் கூறியது:
இந்திய அளவில் டென்னிஸ் மிகவும் சிறப்பான வளர்ச்சி அடைந்து வருகிறது. நான் 9, 10, 15வது வயதுகளில் தினமும் மைதானத்துகு வந்து கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர்களின் பயிற்சி செயல்பாடுகளை காண அதிக ஆர்வம் செலுத்துவேன். தற்போது நான் டென்னிஸ் அரங்கில் 30 ஆண்டுகள் விளையாடிவிட்டேன். தற்போதும் என்னிடம் அதே ஆர்வம் உள்ளது. இப்பொது கூட 14 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள ஸ்பெயின் நடாலின் பயிற்சி உள்ளிட்டவைகளை காண அதிக ஆர்வம் காட்டுவேன். அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளது. அவர்களின் செயல்திறன், கால்களின் வேகம்,ஷாட் அடிக்கும் நுணுக்கங்கள் என எல்லா விஷங்களும் வீரருக்கு வீரர் அவை மாறுபடும். இந்த டேவிஸ் கோப்பை தொடர் அனைவரும் கண்டிப்பாக பார்க்கவேண்டிய போட்டி. குறிப்பாக ஸ்பெயின் போன்ற முன்னணி அணிக்கு எதிராக விளையாடுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் விஷயம். இந்தியாவில் டென்னிஸ் அரங்கில் மேலும் பல இளைஞர்கள் வர வேண்டும் என்பது தான் எனது விருப்பம்.
இவ்வாறு பயஸ் கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்