கஜகஸ்தானில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் நடக்கிறது. இதன் ஆண்கள் 65 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் பூனியா பங்கேற்றார். இதன் முதல் சுற்றில் பூனியா, போலாந்தின் பியின்கோவிஸ்கீயை 9-2 என விழ்த்தினார். அசத்தல்....
தொடர்ந்து நடந்த இரண்டாவது போட்டியில் சுலோவேனியாவின் டேவிட் ஹபாத்தை எதிர்கொண்ட பூனியா ஆரம்பம் முதலே ஆதிக்கத்தை தொடர்ந்தார். இதில் டேவிட்டை கடைசிவரை எழுச்சி பெறவிடாத பூனியா, 3-0 என வென்றார்.
காலிறுதியில் அபாரம்
தொடர்ந்து நடந்த காலிறுதியில் வட கொரியாவின் ஜாங் சால் சனை, இந்தியாவின் பஜ்ரங் பூனியா எதிர்கொண்டார். இதில் துவக்கம் முதல் ஆதிக்கத்தை தொடர்ந்த பூனியா 8-1 என வீழ்த்தினார்.
அரையிறுதியில் ஏமாற்றம்...
அடுத்து நடந்த அரையிறுதியில் கஜகஸ்தானின் தவத்தை எதிர்கொண்ட, பஜ்ரங் பூனியா, 9-9 என போட்டியை ‘டிர’ செய்தார். இதையடுத்து நாளை நடக்கும் வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் பூனியா ரெபிசேஜ் வெற்றியாளருடன் மோதவுள்ளார்.
இதே போல மற்றொரு இந்திய வீரரான ரவி குமார் 57 கிலோ பிரிவு அரையிறுதியில் ரஷ்யாவின் ஜாவுரிடம் 6-4 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்தார். இதையடுத்து ரெபிசேஜ் வெற்றியாளருடன் ரவிகுமார் வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் மோதவுள்ளார்.