ஆப்நகரம்

‘நீச்சல் புயல்’ பெல்ப்ஸ் சாதனையை சமன்செய்த டிரஸல்!

உலக அக்குவாடிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அமெரிக்க நீச்சல் வீரர் டிரஸல் ஏழு தங்கப் பதக்கங்களை வென்று சக அமெரிக்க வீரர் பெல்ப்ஸ் சாதனையை சமன் செய்துள்ளார்.

TNN 31 Jul 2017, 6:17 pm
உலக அக்குவாடிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அமெரிக்க நீச்சல் வீரர் டிரஸல் ஏழு தங்கப் பதக்கங்களை வென்று சக அமெரிக்க வீரர் பெல்ப்ஸ் சாதனையை சமன் செய்துள்ளார்.
Samayam Tamil caeleb dressel emerges from michael phelps shadow
‘நீச்சல் புயல்’ பெல்ப்ஸ் சாதனையை சமன்செய்த டிரஸல்!


ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து முடிந்த உலக அக்குவாடிக்ஸ் சாம்பியன்ஷிப் தொடரில், ஆண்களுக்கான நீச்சல் போட்டியில் அமெரிக்காவின் டிரஸல் ஏழு தங்கப் பதக்கங்களை வென்றார். இதன் மூலம் தொடரின் சிறந்த வீரருக்கான விருதையும் அவர் கைப்பற்றினார்.


ஆண்களுக்கான தனிநபர் ‘பிரீஸ்டைல்’ 50, தனிநபர் ‘பிரீஸ்டைல்’100 மீ., ‘பட்டர்பிளை’ 100 மீ., ‘ரிலே’ பிரிவில் ‘பிரீஸ்டைல்’ 4x100 மீ., ‘மெட்லே’ 4x100 மீ., கலப்பு ‘ரிலே’ பிரிவில் ‘பிரீஸ்டைல்’ 4x100 மீ., ‘மெட்லே’ 4x100 மீ. ஆகிய போட்டிகளில் டிரஸ்ல் தங்கம் வென்றுள்ளார்.

இதன் மூலம் உலக அக்குவாடிக்ஸ் சாம்பியன்ஷிப் நீச்சல் தொடரில் ஒரே ஆண்டில் அதிக தங்கம் வென்ற சக அமெரிக்க வீரர் பெல்ப்ஸின் உலக சாதனையை சமன் செய்துள்ளார்.

2007ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடந்த உலக அக்குவாடிக்ஸ் சாம்பியன்ஷிப் நீச்சல் தொடரில் பெல்ப்ஸ் ஏழு தங்கப் பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்