ஆப்நகரம்

புஜாரா, ஹர்மன்ப்ரீத் கவுர், மாரியப்பன் உள்பட 17 பேருக்கு அர்ஜூனா விருது

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்தது.

TNN 29 Aug 2017, 5:10 pm
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்தது.
Samayam Tamil cheteshwar pujara harmanpreet kaur mariyappan thangavelu in arjuna awards
புஜாரா, ஹர்மன்ப்ரீத் கவுர், மாரியப்பன் உள்பட 17 பேருக்கு அர்ஜூனா விருது


ஆண்டுதோறும், விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு மத்திய அரசு சார்பில் விருதுகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில், 2017ம் ஆண்டிற்கான கேல் ரத்னா, அர்ஜூனா, துரோணாச்சாரியார், தயான் சந்த் போன்ற விருதுகள் வழங்கும் விழா இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்தது.

இந்த விருது வழங்கும் விழாவில் நடந்து முடிந்த மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்மன்ப்ரீத் கவுர், இந்திய கிரிக்கெட் அணியில் டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கிய புஜாரா, ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் ஆகியோர் உள்பட 17 பேருக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது.
விருது பெற்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பட்டியல்:

அர்ஜூனா விருது:

சட்டீஸ்வர் புஜாரா (கிரிக்கெட்)
ஹர்மன்ப்ரீத் கவுர் (கிரிக்கெட்)
மாரியப்பன் (ரியோ பாரா தடகளம்)
வருண் சிங் பட்டி (பாரா தடகளம்)
எஸ்.வி.சுனில் (ஹாக்கி)
சத்யவிரத காடியான் (மல்யுத்தம்)
வி.ஜே.சுரேகா (வில்வித்தை)
குஷ்பிர் கவுர் (தடகளம்)
அரோக்கிய ராஜீவ் (தடகளம்)
லைஷ்ராம் தேபேந்த்ரோ சிங் (குத்துச்சண்டை)
பிரசாந்தி சிங் (கூடைப்பந்து)
சாகேத் மைனனி (டென்னிஸ்)
ஓ.அமல்ராஜ் (டேபிள் டென்னிஸ்)
பி.என்.பிரகாஷ் (துப்பாக்கிச் சுடுதல்)
ஜஷ்விர் சிங் (கபடி)
எஸ்.எஸ்.பி.சவ்ராசியா (கோல்ப்)
ஒய்னம் பெம்பெம் தேவி (கால்பந்து)

துரோணாச்சாரியார் விருது:

ரோஷன் லால் (மல்யுத்தம்)
சஞ்சய் சக்ரவர்த்தி (துப்பாக்கிச் சுடுதல்)
பிரிஜ் பூஷண் மொகந்தி (குத்துச்சண்டை)
சிஎஸ்எஸ்வி பிரசாத் (பேட்மிண்டன்)
ஹீரா நந்த் கடாரியா (கபாடி)
மறைந்த டாக்டர் ஆர்.காந்தி (தடகளம்)
பி.ஏ.ரபேல் (ஹாக்கி)

ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது:

தேவேந்திர ஜாஜாரியா (பாரா தடகளம்)
சர்தார் சிங் (ஹாக்கி)

தயான்சந்த் விருது:

சையத் ஷாகீத் ஹகீம் (கால்பந்து)
சுமராய் டீடே (ஹாக்கி)
புபேந்திர சிங் (தடகளம்)

தேசிய விளையாட்டு தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த பரிசளிப்பு விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கினார். மேலும், ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருதுடன் ரூ.7.5 லட்சமும், துரோணாச்சாரியார், தயான் சந்த் மற்றும் அர்ஜூனா விருதுடன் ரூ.5 லட்சமும் ரொக்கப் பரிசாகவும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்